Google

உண்மை என்பது ஒருவருடைய உள்ளத் தெளிவின் விளை வாக வெளிவர வேண்டும் - J.Krishnamurti



உண்மை என்பது ஒருவருடைய உள்ளத் தெளிவின் விளை வாக வெளிவர வேண்டும்

உண்மை பிறரால் ஒருவருடைய உள்ளத்தே திணிக்கப் படுவது இல்லை

மனம் என்பது காலத்தின் விளைவே ஆகும்

இறந்த காலத்தை அடிப்படையாகக்  கொண்டே மனம் இயங்குகிறது

சிந்திப்பவர் என்றும் பழைய நினைவுகளி லேயே சிந்திக்கிறார்

ஞாபகத்தின் மறுதலிப்பே சிந்தனையாகும்

ஞாபகம் முற்றாக மறையும் போதுதான் சுதந்திரம் பிறக்கிறது

அகத்தே எழுகின்ற ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்வையும்

கவனிக்கத் தொடங்கி னால் உண்மையை அறிந்து கொள்ளலாம்

அன்பு என்பது ஒரு பழக்கம் ஆகாது

அன்பு என்பது எப்போதும் புதிதாகவே காட்சி அளிக்கும்

உண்மை என்பது தெரிந்து கொள்வது அல்ல

உண்மையைத் தேடும் மனம் உண்மையைத் தெரிந்து கொள்ளாது

தெரிந்த ஒன்றையே
ஒருவரால் சிந்திக்க முடியும்

கடவுள் உண்மை இவைகளை நீங்கள் சிந்திக்க முடியாது

ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொள்ளும் போது

சகல பிரச்சினை களும் மறைகின்றன

பிரச்சினைகள் தாமாக மறையும் போது மனத் தெளிவு பிறக்கிறது

தெளிவு பிறக்கும்போது மனம் விழிப்பு பெறுகிறது

மனம் விழிப்பு பெறும் போது உண்மை தானாகவே வெளிப் படுகிறது

எனவே அறிவு கற்றல் ஆகியவை உண்மை யைக் காண்பதற்கு தடைகளாக உள்ளன

கோட்பாடுகள்,

பழக்க வழக்கங்கள்

நம்பிக்கைகள்

கலாசாரங்கள்

பண்பாடுகள்

மதங்கள் சடங்குகள்

இவைகள் எல்லாம் அச்சத்தின் காரண மாகவே தோற்றுவிக்கப் பட்டுள்ளன

நான் ஒன்றும் அறியாதவன் என்று உணர்ந்தவனை தான்
ஞானமும் உண்மையும் வந்தடையும்

தன்னைப் பற்றிய அறிவினாலேயே

ஒருவர் உண்மையை இறைவனை அடைய முடியும்

மனம் மிக அமைதியாக இருந்தால்தான்  எதையும் நீங்கள் கவனிக்க முடியும்

மனத்தின் இயக்கமே மனத்தை அறிந்து கொள்ள தடையாகும் <3

J. கிருஷ்ண மூர்த்தி
விழிப்புணர்வு
பற்றிய விளக்கங்கள் 🌼
 - J.Krishnamurti

Comments