Google

இந்த சூழ்ச்சியான உலகத்தில் வாழ ஒரே வழி அதிக சூழ்ச்சியுடன்தான் என்று தெரிகிறது - OSHO



இந்த சூழ்ச்சியான உலகத்தில் வாழ ஒரே வழி அதிக சூழ்ச்சியுடன்தான் என்று தெரிகிறது.

எல்லோரும்,எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும்போது சூழ்ச்சியாக இருப்பதுதான் கவசம்.

அதனால் எல்லோருமே சூழ்ச்சியாகி விடுகிறார்கள்.

எச்சரிக்கையாய் இரு. இந்த உலகத்தில் பிழைக்க வேண்டும் என்பது மட்டும் குறிக்கோளாக இருக்கக் கூடாது. காரணம் நீ பிழைத்தால், மரணம் வரப்போகிறது.

உன்னிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் கூட, மரணம் வரத்தான் போகிறது. உன்னிடம் எல்லாவித அதிகாரம்,கௌரவமிருந்தாலும், அவை எல்லாமே போலி.

காரணம், உள்ளே நீ ஏழை, வெறுமைதான்.

உண்மையிலேயே புத்திசாலி நபர் என்பவர் தன் உள் பொக்கிஷங்களைக் கண்டுபிடிப்பவர். உள்ளே உள்ள நிரந்தரத் தன்மையை, கடவுளைக் கண்டுபிடிப்பவர்.

புத்திசாலி நபரைப்பற்றிய என்னுடைய விளக்கம் இதுதான். கடவுளைக் கண்டு பிடிப்பவர்.

கடவுளைக் கண்டுபிடிக்கிற வரை உன்னை நீ புத்திசாலியாக நினைத்துக் கொள்ளாதே. நீ அறிவு ஜீவியாக இருக்கலாம். ஆனால் நீ புத்திசாலி அல்ல.

புத்திசாலித்தனம் என்பது தியானத்தின் மூலமே சாத்தியம்.

மனம் தியானத்தில் கரையும்போது, சிந்தனைதான் உங்களை ஆட்டிப்படைக்கிறது என்றால், உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் உன் எண்ணங்களைத் தள்ளி வைத்து, வெறுமைக்குள் உன் விருப்பப்படி நகர முடியுமானால்,

நீ உன் மரணத்திற்குப் பலியாகாமல், அதற்கு எஜமானனாக முடியுமானால், பிறகு நீ புத்திசாலி.

--ஓஷோ--
Osho_Tamil

Comments