கடின முயற்சியால், முயற்சியற்ற தன்மையை அடைந்த புத்தர் - OSHO
* புத்தர் *
கடின முயற்சியால், முயற்சியற்ற தன்மையை அடைந்த புத்தர்.
புத்தர் - மனிதனால் சாத்தியப்படும்
அனைத்தையும் அவர் செய்து பார்த்து விட்டார்.
ஒன்றும் நடக்க வில்லை.
அவர் வெறுத்து போனார்.
எல்லா செயல்களும் அர்த்தமற்றதாக பலனில்லாததாக, வெத்துவேட்டாக தோன்றியது.
ஒரு நாள் இரவு அவர் அனைத்து முயற்சிகளையும் கை விட்டார்.
அவர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அவர், “எல்லாமும் முடிந்து விட்டது, இந்த உலகில் ஒன்றுமில்லை, ஆன்மீக
தேடுதலிலும் ஒன்றுமில்லை.
இப்போது நான் செய்யக்கூடியது ஏதுமில்லை. எல்லாமும் முடிந்தது. இந்த உலகம் மட்டுமல்ல, அடுத்த உலகமும் இல்லை.” என்று கூறிக்கொண்டார்.
திடீரென அங்கு எல்லா முயற்சிகளும் போய்விட்டன.
அவர் திடீரென வெறுமையானார். ஏனெனில் செய்வதற்கு ஏதுமில்லை எனும் போது மனதினால் நகர முடியாது.
செய்ய ஏதாவது இருக்கும்போதுதான் மனம் நகர முடியும் – ஏதாவது குறிக்கோள்.
ஏதாவது லட்சியம் – எதிர்காலத்தில் எதையாவது அடைய வேண்டும், ஏதாவது கிடைக்க வேண்டும்
எனும்போதுதான் மனம் செயல்படும்.
இன்றில்லையென்றாலும் நாளை ஏதாவது நடைபெறும் சாத்தியம் இருக்கிறது எனும் போதுதான் மனம் ஓடும்.
அன்று இரவு புத்தர் இறுதி நிலைக்கு வந்தார்.
உண்மையில் அவர் அந்த கணம் இறந்துவிட்டார்.
ஏனெனில் எதிர்காலம் என்பது இல்லை.
எதையும் அடைய வில்லை, அடையவும் எதுவுமில்லை.
"நான் எல்லாமும் செய்து பார்த்து விட்டேன். இந்த முழு உலகமும் பலனற்றது இந்த முழு பிரபஞ்சமும் மிரட்சியானது – இந்த பொருளுலகம் மட்டுமல்ல பயனற்றது, ஆன்மீக உலகமும் பயனற்றதுதான்." என்றார் புத்தர்.
அவர் தளர்ந்து போனார்.
அவர் தளர்வு செய்து
கொள்ளவில்லை.
இந்த விஷயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இறுக்கமாக இருக்க ஏதும் இல்லை.
எனவே அவர் தளர்வடைந்தார்.
தளர்வடைய அவர் முயலவில்லை.
அரச மரத்தடியில் அவர் தளர்வு கொள்ள முயற்சிக்க வில்லை.
இறுக்கமாக இருக்கவோ, செய்யவோ, ஆசைப்படவோ,
நம்பிக்கை கொள்ளவோ, ஏதுமில்லை.
அன்று இரவு அவர் முழுக்க முழுக்க நம்பிக்கையிழந்து விட்டார்.
தளர்வாகி விட்டது.
தளர்வு நிகழ்ந்தது.
நீ தளர்வு செய்து கொள்ள முடியாது.
ஏனெனில் அப்போது எதையாவது செய்வது என்பது இன்னும் உன் மனதில் உள்ளது.
நீ அதை சுற்றி சுழன்று கொண்டிருக்கிறாய்.
திடீரென அந்த சுழற்சி நின்று விட்டது, அந்த சக்கரம் நின்றுவிட்டது.
புத்தர் தளர்வுற்று உறக்கத்தில் ஆழ்ந்தார்.
காலையில் அவர் விழிக்கும் போது வானத்தில் இறுதி நட்சத்திரம் மறைந்து
கொண்டிருந்தது.
அவர் அது மறைவதை பார்த்துக் கொண்டிருந்தார், அந்த நட்சத்திரம் மறைந்த சமயம் அவரும் மறைந்து விட்டார்.
அவர் ஞானம் பெற்று விட்டார்.
மக்கள் அவரிடம், எப்படி நீங்கள் இதை அடைந்தீர்கள்,
அந்த முறை என்ன என்று கேட்கத் தொடங்கி விட்டனர்.
இப்போது நீங்கள் புத்தருக்கு வந்த சோதனையை பாருங்கள்.
அவர் நான் இந்த
முறை மூலம் அடைந்தேன் என்று கூறினால் அது தவறு, ஏனெனில் அவர் எந்த முறையும் இல்லாத போதுதான் அடைந்தார்.
அவர் தான் முயற்சி செய்ததன் மூலமாக அடைந்ததாக கூறினால் அது தவறு, ஏனெனில் அவர் முயற்சி எதுவும் இல்லாமல் இருந்த போதுதான் அது நிகழ்ந்தது.
ஆனால் முயற்சி எதுவும் செய்யாதீர்கள், நீங்கள் அடைந்து விடுவீர்கள் என்று சொன்னாலும் அது தவறு, ஏனெனில் அவரது முயற்சியற்ற தன்மையின் பின்னே அவரது ஆறு வருட முயற்சி இருக்கிறது.
அந்த முயற்சி இல்லாமல், அந்த ஆறு வருட கடின முயற்சியில்லாமல், இந்த முயற்சியற்ற தன்மையை அடைந்திருக்க முடியாது.
இந்த தீவிர முயற்சியினால் தான் அவர் சிகரத்தை வந்தடைந்தார்.
அங்கிருந்து வேறு எங்கும் போக முடியாத நிலையில்.
அவர் தளர்வடைந்து பள்ளத்தாக்கில் விழுந்தார்.
இதை பல காரணங்களுக்காக நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆன்மீக முயற்சி மிகவும் முரண்பாடான சிக்கலான ஒரு விஷயம்.
*முயற்சியினால் எதுவும் நிகழாது என்ற முழுமையான தன்னுணர்வுடன் முயற்சியை மேற் கொள்ள வேண்டும்.*
முயற்சியற்ற, முயற்சியில்லாத நிலையை அடைவதற்காக முயற்சி மேற் கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்கள் முயற்சியில் தளர்வு கொள்ளக் கூடாது, ஏனெனில் நீங்கள் தளர்வு கொண்டால் புத்தருக்கு வந்த அந்த தளர்வு நிலை உங்களுக்கு நிகழாமல் போய்விடும்.
நீங்கள் முயன்று கொண்டே
இருக்க வேண்டும், அப்போது தானாகவே அந்த தளர்வுநிலை நிகழும் ஒரு கட்டம் உங்களது முயற்சியால் வரும்.
~ ஓஷோ ~
-OSHO_Tamil
Comments
Post a Comment