Google

ஒரு சிறிய தியானப் பயிற்சி❤



ஒரு சிறிய தியானப் பயிற்சி❤


விருப்பட்டவர்கள் செய்து பார்க்கலாம்

💛நிறுத்து........!!!

யுக்தி

எப்போது குறைந்தபட்சம்
ஒருநாளில் 6 தடவை. அதிக பட்சம்
எவ்வளவு வேண்டுமானாலும்.
ஆனால் திடீரெனத்தான் செய்யப்பட வேண்டும்.

தெருவில் நடந்து போய்க்
கொண்டிருக்கும் போது,

எதையாவது செய்து
கொண்டிருக்கும் போது,

திடீரென
சுய உணர்வு வரும்போது,

நிறுத்து – முழுமையாக
நிறுத்து,

அசைவுகள் இன்றி இரு.

என்ன நிகழ்கிறது என்ற உணர்வோடு
இரு.

பின் நகர ஆரம்பி.

திடீரென நீ தன்னிலை
அடையும்போது, சக்தி
முழுமையாக மாற்றமடைகிறது.

மனதில் ஓடிக் கொண்டிருப்பது
நின்று விடும்.

அவ்வளவு விரைவாக மனதால் உடனே வேறொரு சிந்தனையை உருவாக்க முடியாது.

அதற்கு சிறிது நேரம் பிடிக்கும், மனம் முட்டாள் தனமானது, அதற்கு உடனே செயல்பட தெரியாது.

அதனால் நீ திடீரென
செய்யும்போது........ அந்த நிறுத்து
எனும்போது மனம் நிற்கிறது,

ஒரு
வினாடி எல்லாமும்
தெளிவாகிறது.

எல்லா எண்ணங்களும் மறைந்து விடும் – அங்கே வெறுமை.

 அந்த வெறுமையில் ஒரு தெளிவு.
நிறுத்தும்போது அதை அதிக
நேரம் செய்யாதே.

ஏனெனில் அரை நிமிடத்தில் மனம் திரும்ப உயிர் பெற்று அந்த தெளிவை அழித்து விடும் 💛

💚 ஓஷோ 💚
-OSHO_Tamil

Comments