Google

அனுபவம் ஒன்றே ஞானம் - OSHO



அனுபவம் இல்லாது ஞானம் இல்லை என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.

 அனுபவம் ஒன்றே ஞானம்.

 சொத்தை அனுபவித்தால் மட்டுமே விடுதலை தரும்.

 ஆன்மீகவாதியாகும் ஏழை கூடத் தனது முந்தைய பிறவிகளில் ஒன்றிலாவது பணக்காரனாக இருந்திருத்தல் வேண்டும்.
 அனுபவம் இல்லாமல் ஞானம் பெறுதல் இயலாது.

 பணத்தாசையிலிருந்தும் பணத்தின் பயனை அடைவதிலிருந்தும் யாரும் விடுபடுதல் இல்லை.

முதலில் அனுபவமே இல்லாமல் "அது பயனற்றது" என்று ஒன்றைப் பற்றி எவ்வாறு கூற முடியும்?


 அனுபவத்தால் அறிவு;

 அறிவால் மதிப்பீடு. தெரியாத ஒன்றைப் பற்றியே பயம் ஏற்படும். பகைவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனோடு முதலில் பழக வேண்டும்.
ஒன்றைத் தவறு என்று அறிய அதன் அனுபவம் அவசியம் தேவை.

 சாலைகளில் செல்லும் போது குழிகளில் விழுந்து பாதையை தவற விடுகிறவர்களே குழிகளைப் பற்றி நன்கு அறிவார்கள்.

வாழ்வில் அறிவைப் பெற வேறு வழியே இல்லை. நாம் வாழ்க்கை என்று கூறுவதின் எல்லை மிகக் குறுகியதாக இருக்கலாம்.

 ஆனால்

வாழ்க்கைப் பயணம் மிகவும் நீண்டது.
-OSHO_Tamil

Comments