Google

மனநிலை நிர்வாகம், வயிற்றிலிருந்து சிரியுங்கள் - OSHO



6.8.ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 6- மனநிலை நிர்வாகம்

பகுதி8- வயிற்றிலிருந்து சிரியுங்கள்.
.
எப்போதெல்லாம் நீங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறீர்களோ, அப்போது, உங்கள் கீழ்தாடையை தளர்த்துங்கள், வாயை லேசாக திறந்துகொள்ளுங்கள். வாயில் சுவாசிக்க ஆரம்பியுங்கள் ஆனால் ஆழமாக சுவாசிக்க வேண்டாம். உடல் சுவாசிக்கட்டும், அதுவாகவே சுவாசித்தால் சுவாசம் ஆழமில்லாமல் இருக்கும், அது மேலும்மேலும் ஆழமற்று, ஆழமற்று போகும். அப்படி அந்த சுவாசம் ஆழமற்று போகும்போது, வாய்திறந்து, தாடை தளர்ந்து இருந்தால், உங்கள் முழுஉடலுமே தளர்ந்து இருப்பதை உணர்வீர்கள்.
.
அந்த தருணத்தில், ஒரு புன்னகையை உணர ஆரம்பியுங்கள் – முகத்தில் அல்ல , உங்கள் உள் இருத்தல் முழுவதும். உங்களால் முடியும். அது உதட்டில் வரும் புன்னகை அல்ல: அது இருத்தலின் புன்னகை. அது உள்ளே பரவும்.
.
அதை இன்றிரவு முயலுங்கள் அது என்னவென்று புரியும் … காரணம் அதை சொல்லி விளக்க முடியாது.  உதட்டினால், முகத்தினால் புன்னகைக்க வேண்டியதில்லை.  ஏதோ நீங்கள் வயிற்றிலிருந்து புன்னகைப்பதைப்போல. வயிறு புன்னகைக்கிறது.  அது புன்னகை, சிரிப்பல்ல, அதனால் அது மிருதுவானதாக, மென்மையாக, மெலிதாக, இருக்கும். ஒரு ரோஜா வயிற்றில் மலர்ந்து அதன் மணம் உடல் முழுவதும் பரவுவதைப்போல.
.
இந்த புன்னகை என்ன என்பது உங்களுக்கு தெரிந்துவிட்டால் நீங்கள் இருபத்திநான்கு மணிநேரமும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  நீங்கள் எப்போதெல்லாம் அந்த மகிழ்ச்சியை இழப்பதாக உணர்கிறீர்களோ, அப்படியே கண்களை மூடுங்கள், அந்த புன்னகையை பிடித்துக்கொள்ளுங்கள். அது அங்கே இருக்கும்.  பகல் வேளையில், உங்களுக்கு எத்தனைமுறை வேண்டுமோ, நீங்கள் அதைப் பிடித்துக்கொள்ளலாம். அது எப்போதும் அங்கே இருக்கிறது.

.
-தொடரும்.
-OSHO_Tamil

Comments