Google

உங்கள் விழிப்பு நிலை , கனவு நிலை , தூக்க நிலை ..- OSHO



உங்கள் விழிப்பு நிலை ,
கனவு நிலை ,
தூக்க நிலை ..

இவைகளை பார்த்துக்
கொண்டிருக்கும்
சாட்சி நிலையாக மாறுங்கள் ..

உங்கள் எண்ணங்கள் மனமாகிய
வானத்தின் ஊடே
மேகங்கள் போல் திரிகின்றன ..

எண்ணங்கள் மிதந்து கொண்டு
இருப்பதை நீங்கள் ...

கவனிக்கும் போது அவை தானாக
நின்றுவிடும் ..

அப்போது நீங்கள் அந்த
எண்ணங்கள் மிதக்கும்
வெட்டவெளியாகி விடுவீர்கள் ..

எந்தவித எண்ணத்துடனும்
ஒட்டுதல் இன்றி ..

எதனுடனும் அடையாளப்படாமல்
வெட்டவெளி போன்று
இருப்பதே சன்னியாசம் ..

உங்கள் மேல் யாரேனும் கோபமாக
இருந்தாலோ ..

உங்களை யாரேனும் அவமானப்
படுத்தினாலோ ..

அதை அப்படியே கவனித்தபடி
இருங்கள் ..

உங்களுக்கு கோபம் வந்தாலும் அதைக்
கவனித்தபடி இருங்கள் ..

எதையும் பற்றிக் கொள்ளாமல்
பெரிது படுத்தாமல்
இருங்கள் ..

அப்போது உங்கள் உணர்வு
தூயதாக மாறும் ..

திடுமென நீங்கள் முற்றிலும் விழிப்பு
நிலையை அடைந்து விடுவீர்கள் ..

--ஓஷோ--
-OSHO_Tamil

Comments