Google

உள் முகமாக பார்க்க முயலுங்கள் - OSHO



உள் முகமாக பார்க்க முயலுங்கள்...
-------------------------------

மேலும் மேலும் அதிக அளவில் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்யுங்கள்.

 மேலும் மேலும் உள்ளே பார்க்க முயலுங்கள்.

 ஆரம்பத்தில் அது கடினம்.

 அங்கே மிகுந்த இருளாக தோன்றும், காரணம் நாம் உள்ளே எப்படி பார்ப்பது என்பதைகூட மறந்துவிட்டோம், அதை உதாசீனப்படுத்தி, புறக்கணித்துவிட்டோம்.
 மெதுவாக, மெதுவாக, அந்த பழைய பழக்க பாறைகள் உடைபடும்.

 நீங்கள் உணர்ந்து, ஈர்த்து, துழாவ ஆரம்பிக்கையில், பின் தெரிய ஆரம்பிக்கும்.

 மெதுவாக, மெதுவாக நீங்கள் அதனுடன் ஒத்துப்போய், உங்களால் அதைப் பார்க்க முடியும்.

முதலில் அது முற்றிலும் இருளாக இருக்கும்.

 நீங்கள் வெளியே சூரிய வெட்பத்திலிருந்து விட்டு நீங்கள் உங்கள் அறைக்குள் வரும்போது, அங்கே இருட்டாக இருக்கும்.

சில வினாடிகள் உங்களால் எதையும் பார்க்க முடியாது.

அதைப்போலத்தான்; பிறகு கண்கள் ஒத்துப் போய்விடும்.

 மெதுவாக, மெதுவாக, அறையின் இருள் குறைந்து விடும், பின் அங்கே வெளிச்சமிருக்கும்.

உள்ளேயும் அதே கதை தான்.

 கொஞ்சநேரம் எல்லாமே இருட்டாக இருக்கும்.

 ஆனால் நீங்கள் வலியுறுத்தினால் - தியானம் தான் வலியுறுத்துதல்..

  நீங்கள் பொறுமையாக இருந்தால் –  பொறுமையாக இருத்தல் தான் தியானம்...

 நீங்கள் தோண்ட தோண்ட, நீங்கள் ஒருநாள் உங்கள் சக்தியின் ஆதாரத்தின் மீது தடுக்கி விழுவீர்கள்.

 திடீரென்று அந்த இருள் காணாமல் போகும்.

பிறகு எங்குமே ஒளிதான் – பிரும்மாண்டமாக, மிக அழகாக இருக்கும்.

 அந்த அழகை ஒருவர் கனவு கூட காண முடியாது.

~ ஓஷோ ~
Osho_tamil

Comments