Google

உணவு: (பகுதி 1) - OSHO



மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை: உணவு: (பகுதி 1)
       கிழக்கின் இறை சார்ந்த பாரம்பரியத்தில் நீங்கள் நினைப்பது எல்லாமே உணவைத்தவிர வேறு இல்லை. உங்கள் உடல் ஓர் உணவு. உங்கள் மனம் என்பது உணவு. உங்கள் ஆன்மா என்பது உணவு. உங்கள் ஆன்மாவிற்கு அப்பால் குறிப்பிட்ட ஏதோ உணவில்லை. அந்த ஏதோவொன்றுதான் அனத்தா. சுயம் இல்லாதது. அது முற்றிலும் வெறுமையானது. புத்தர் அதை சூன்யம் என்பார். அந்த வெறுமை. அது தூய்மையான இடைவெளி. அதில் அது மட்டுமே இருக்கும். விஷயமற்ற உணர்வு.

              அங்கே ஏதாவது விஷயமிருக்கும்போது, உணவும் இருக்கும். உணவு என்றால் வெளியே இருந்து உள்ளே திணிக்கப்படுவது. உடலுக்கு உணவு தேவை. அது இல்லையென்றால், அது உதிர்ந்து விடும். அப்படிதான் அது வாழ்கிறது. அதில் உணவைத் தவிர வேறு எதுவுமில்லை.

               உங்கள் மனதில் நினைவுகள், எண்ணங்கள், ஆசைகள், பொறாமைகள், அதிகார சிந்தனை, பிறகு ஆயிரத்தொரு விஷயங்கள். அவை எல்லாமே உணவுதான், ஒரு நுண்ணிய நிலையில் உள்ள கொஞ்சம் அதிகமாக உணவு. எண்ணம் என்பது உணவு. நீங்கள் எண்ணங்களை போஷாக்கிட்டு வளர்க்கும்போது உங்கள் மார்பு விரிகிறது. உங்களிடம் சிந்தனைகள் இருக்கும்போது அது உங்களுக்கு ஒரு பலத்தைக் கொடுக்கும்போது நீங்கள் நன்றாக இருப்பதாக உணர்கிறீர்கள். யாரோ ஏதோ நல்லதாக உங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். ஒரு பாராட்டு, உங்களுக்குள் என்ன ஆகிறது என்று பாருங்கள். உங்களுக்கு ஒரு தெம்பு வரும். யாரோ உங்களைப் பற்றி தவறாக சொல்கிறார்கள். அதைக் கவனியுங்கள். யாரோ உங்களிடமிருந்து எதையோ பிடுங்கிக் கொண்டு போனதைப் போல, முன்பை விட இப்போது நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள்.

            மனம் என்பது நுண்ணிய நிலையில் உள்ள உணவு, உடலின் உள்பகுதிதான் மனம். அதனால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அது மனத்தைப் பாதிக்கிறது. நீங்கள் அசைவ உணவு உண்டால் அதற்கு ஒரு வகையான மனமிருக்கும். நீங்கள் சைவம்  சாப்பிட்டால், நிச்சயமாக உங்களுக்கும் வேறு மாதிரியான மனமிருக்கும்.

--ஓஷோ--
-OSHO_Tamil

Comments