Google

தினமும் சாப்பிடுவதற்கு முன் தியானம் செய்யுங்கள்- OSHO



தினமும் சாப்பிடுவதற்கு முன் தியானம் செய்யுங்கள். கண்களை மூடி உங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதை உணருங்கள். அது எதுவாக வேண்டுமானாலுமிருக்கலாம். நீங்கள் எந்த உணவையும் பார்க்கவில்லை. எந்த உணவும் கிடைக்கவில்லை. நீங்கள் வெறுமே உங்களுக்குள் உணர்கிறீர்கள். உங்கள் உடலுக்கு என்ன தேவை. நீங்கள் என்ன மாதிரி உணர்கிறீர்கள், நீங்கள் எதை நாடுகிறீர்கள்.

             டாக்டர் லியானார்ட் பியர்சன் இதை "முணுமுணுக்கும் உணவு" என்பார்.  உணவு உங்களுக்குள் முணுமுணுக்கும். உங்களுக்குத் தேவையான அளவிற்கு போய் சாப்பிடுங்கள்,  ஆனால் அதிலேயே இருங்கள். இன்னொரு வகை உணவு என்பது, "சைகை காட்டும் உணவு" அது உங்களுக்குக் கிடைக்கும்போது, உங்களுக்கு அதில் ஓர் ஆர்வம் வரும். பிறகு அது உங்கள் மன விஷயம். அது உங்கள் தேவையல்ல. நீங்கள் உங்கள் முணுமுணுக்கிற உணவைக் கவனித்தால், உங்களுக்குத் தேவையான அளவுக்கு சாப்பிடலாம். நீங்கள் அவதிப்படமாட்டீர்கள். காரணம் அது உங்களைத் திருப்திப்படுத்தும். உடல் அதற்கு தேவையானவற்றின் மீது ஆசைப்படுகிறது. அது வேறு எதிலும் நாட்டம் கொள்ளாது. அது திருப்திகரமாக இருக்கும், ஒரு முறை திருப்தி ஏற்பட்டுவிட்டால், ஒருவர் அதிகம் சாப்பிடமாட்டார்கள். பிரச்னை எப்போது எழும் என்றால், நீங்கள் சைகை காட்டுகிற உணவை உட்கொள்ளும்போதுதான். அது கிடைக்கிறது என்பது தெரிகிறது. உங்களுக்கு ஆர்வம் வருகிறது; நீங்கள் சாப்பிடுகிறீர்கள். அது உங்களைத் திருப்திப்படுத்தாது. காரணம் உடலில் அதற்கான தேவைகளில்லை. அது உங்களைத் திருப்திப்படுத்த வில்லையென்றால், நீங்கள் திருப்தியடையாததை உணர்கிறீர்கள். நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்கள். ஆனால் எவ்வளவுதான் நீங்கள் சாப்பிட்டாலும், அது உங்களுக்குத் திருப்தியைத் தரப்போவதில்லை. அது உங்களைத் திருப்திப்படுத்தப் போவதில்லை. காரணம் அதற்கான தேவையே அங்கில்லை. முதல் வகையான ஆசையை நிறைவேற்ற வேண்டும். பிறகு இரண்டாவது காணாமல் போய்விடும். மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அவர்கள் முதலாவதைக் கவனிப்பதில்லை. அதனால் இரண்டாவது பிரச்னையாகிறது. நீங்கள் உங்கள் முணுமுணுக்கும் உணவை, கேட்டால், அந்த சைகை காட்டும் உணவு மறைந்துவிடும். அந்த இரண்டாவது பிரச்சனைதான் காரணம், நீங்கள் உங்கள் உள்ஆசைகளைக் கவனிக்க வேண்டுமென்பதை முழுமையாக மறந்து விடீர்கள். அதைக் கவனிக்கக் கூடாது என்று மக்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது; " இதை சாப்பிடு, அதை சாப்பிடாதே, "நிர்ணயிக்கப்பட்ட விதிகள், உடலுக்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட விதிகளும் தெரியாது."  

ஓஷோ (மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை)
-OSHO_Tamil

Comments