உங்களால் வார்த்தைகளில் இல்லாத உண்மையைப் பார்க்க முடியாவிட்டால், உங்கள் வாழ்க்கைப் பாதை முழுவதுமே ஏமாற்றம் அடைவீர்கள். - OSHO
உங்களால் வார்த்தைகளில் இல்லாத உண்மையைப் பார்க்க முடியாவிட்டால், உங்கள் வாழ்க்கைப் பாதை முழுவதுமே ஏமாற்றம் அடைவீர்கள்.
எல்லா இடங்களிலும் நீங்கள் ஏமாற்றப் படுவீர்கள்.ஏனெனில், நீங்கள் வார்த்தையை உண்மை என்று எடுத்துக் கொள்கிறீர்கள்.
வார்த்தைகளை உண்மையிலிருந்து பிரிக்க முயற்சியுங்கள்.
உங்கள் அன்றாட வாழ்கையில் "நான் உன்னை வெறுக்கிறேன்" என்று சொன்னால் அந்த வார்த்தையை நம்பி விடாதீர்கள்.அது ஒரு கணத்தில் தோன்றியதாக இருக்கலாம்.
அது ஒரு அங்கமாக இருக்கலாம், வார்த்தைகளோடு செல்லாதீர்கள்.இல்லையெனில் நீங்கள் வாழ்க்கைக்கே எதிரியாகி விடுவீர்கள்.
வார்த்தைகளால் நண்பர்களை உருவாக்கிக் கொண்டது போல், வார்த்தைகளால் எதிரிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
வார்த்தைகளுக்காகச் செல்லாதீர்கள்.அந்த மனிதருக்குள் பாருங்கள்.முழுமையை உணருங்கள்.அது ஒரு கணத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது முறை ஒரு கணத்தின் செயலாகத்தானிருக்கும்.ஏதாவது ஒரு செயலால் அவன் வேதனையடைந்திருக்கலாம், அதனால் "நான் உன்னை வெறுக்கிறேன்" என்று சொல்வதன் மூலம் அதை வெளிப்படுத்தி இருக்கலாம்.
காத்திருங்கள்.முடிவு செய்துவிட வேண்டாம்.
"இது என் எதிரி" என்று சொல்லி விடாதீர்கள்.இப்படிச் சொன்னால் நீங்கள் அடுத்தவரின் வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு விடுவதில்லை.உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
நீங்கள் "இது என் எதிரி" என்று சொல்லிவிட்டால் இந்த வார்த்தை விடாப்பிடியாக இருக்கும்.நாளை ஒரு வேளை அவன் மாறிவிட்டால் கூட நீங்கள் மாறுவதற்குத் தயாராயிருக்க மாட்டீர்கள்.
உங்களுக்குள் அதை சுமந்து கொண்டிருப்பீர்கள்.நீங்கள் குறிப்பிட்டு விட்டதாலேயே நீங்கள் எதிரியை உருவாக்கி விடுவீர்கள்.
உங்கள் எதிரிகள் பொய், உங்கள் நண்பர்கள் பொய், ஏனெனில் வார்த்தைகள் உண்மையல்ல.
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment