Google

இயற்கையாக தியானத்தின் குணம் என்ன ? - OSHO



இயற்கையாக தியானத்தின் குணம் என்ன ?


எல்லா மதங்களும் மனிதனை திசை திருப்புகின்றன, ஏமாற்றுகின்றன..

 ஏனெனில் மக்கள் ஆன்மீகரீதியான ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

 அவர்களுக்கு ஒரு பொம்மை – ஒரு மணி நேரம் இந்த தியானம் செய்வதை வைத்துக் கொள் – கொடுக்கப்படுகிறது.

 ஆனால்

 இதன் தன்மையை மக்கள் பார்ப்பதில்லை.

 இது இயற்கையானது அல்ல.

 நீ இதை இந்த வழியில் செய்ய முடியாது.நீ ஒரு நாள் முழுவதும் தியானம் செய் அல்லது நாள் முழுவதும் தியானம் செய்யாமல் இரு.

 அது உன் முடிவுதான். ஆனால்
நீ உன் வாழ்வை இரண்டு விதமாக பிரிக்கமுடியாது.
 – கோவிலில் தியானிப்பது, கடையில் ஆபீஸில் தியானிக்காமல் இருப்பது என இருக்கமுடியாது.

கௌதமபுத்தர் மற்றும் அவர் வழி வந்த அவரைப் போன்ற மக்கள் கடந்த காலங்களில் நீ என்ன செய்தாலும் உன் ஒவ்வொரு செயலிலும் ஊடுருவும் ஒரு தியானத்தை வலியுறுத்தி வந்தனர்.

 அது உன்னை நிழல் போல தொடரும்.

 அது உன் உள்ளுணர்வில் தன்னுணர்வில் ஒரு ஆழ்நீரோட்டம் போல ஓடிக் கொண்டே இருக்கும்.

நீ கடைவீதியிலோ, கோவிலிலோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

 ஆனால் உனது உள்ளார்ந்த மௌனம் பாதிக்கப்படாமல், சிதையாமல் இருக்க வேண்டும்.

அதுதான் உண்மையான தியானத்தின் குணம்...

     --'ஓஷோ'--
-OSHO_TAMIL

Comments