Google

தனிமை , ஒருமை - OSHO



தனிமை ,   ஒருமை  

தனிமையிலிருந்து தப்பி ஓடுவதற்கு பதிலாக அதில் முழ்கி,

அது என்னவென்று நேருக்கு நேராக பார்ப்பதற்கான,

 அதனுடன் இயைந்து செல்வதற்கான, ஒரே வழி தியானம்தான்.

 பின் நீ வியப்படைவாய். நீ உனது தனிமையின் உள்ளே சென்றால் அதன் மையத்தில் இருப்பது தனிமை அல்ல முற்றிலும் வேறுபட்ட விஷயமாக உள்ள ஏகாந்தம் – ஒருமை – என்பதை அறியும்போது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

வெளிப்புற சூழ்நிலை தனியானதாகவும் மையம் ஒருமையானதாகவும் அமைந்திருக்கிறது.

வெளிபுறம் தனிமையாகவும் உள்மையம் ஏகாந்தமாகவும் உள்ளது.

ஒரு முறை உனக்கு உனது அற்புதமான ஒருமை தெரிந்து விட்டால் பின் முற்றிலும் வித்தியாசமான ஆளாக மாறிவிடுவாய்.

 நீ ஒருபோதும் தனியாக உணர மாட்டாய். தனியாக இருக்க நேரிடும் மலை, பாலைவனம் போன்ற இடங்களில்கூட நீ தனியாக உணர மாட்டாய்.

ஏனெனில் உன் ஒருமையில் கடவுள் உன்னுள் இருப்பதை நீ அறிந்து விட்டாய்.

உன் ஒருமையில் நீ கடவுளுடன் ஆழ்ந்த தொடர்பில் இருப்பது தெரிந்த பின் தனிமையில் இருப்பதைப்பற்றி யார் கவலைப் பட போகிறார்கள்,

கூட யாராவது இருந்தால் என்ன? யாரும் இல்லாவிட்டால் என்ன?

நீ உள்ளே நிறைந்திருக்கிறாய், உள்ளே செல்வந்தனாக இருக்கிறாய்.

-- ஓஷோ --
OSHO_Tamil

Comments