Google

தந்த்ரா அனுபவம் - OSHO



தந்த்ரா அனுபவம் :
       தந்த்ராவின் அடிப்படை, விளையாட்டுத்தன்மைதான். அது எதையும், கடுமையாக(serious) எடுத்துக்  கொள்வதில்லை.  ஆனால், எதிலும் ஒரு ஈடுபாட்டுடன் (sincere) இரண்டற செயல்படும். அது எப்பொழுதும்  மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலேயும்தான் இருக்கும். தந்த்ரா ஒரு கொண்டாட்டமான விளையாட்டு. ஏனெனில், தந்த்ரா அன்பை ஆதாரமாக வைத்து  செயல்படுகிறது. அன்பின் மறுபரிமாணம் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும்தான்.
          அன்பை, ஒரு  விளையாட்டு  என்று  கூட நினைக்காதவர்கள், இந்த உலகத்தில்  நிறையபேர்கள் உண்டு. மகாத்மா  காந்தி, "நீங்கள், ஒரு குழந்தைக்காக மட்டுமே  ஒரு பெண்ணின்மேல் அன்பு செலுத்தலாம்." என்று  கூறுகிறார்!  அன்பைக்கூட, இவர்கள்  ஒரு தொழிலாக ஆக்கிவிட்டார்கள்! அதாவது  'சினைப்படுத்துதல்'. இந்த  வார்த்தையே மிகவும்  அருவருப்பானது.  அன்பு  என்பது  ஒரு  வேடிக்கை,  விளையாட்டு.  நீங்கள்  மகிழ்ச்சியோடு இருக்கும்  பொழுதுதான் நீங்கள்  ஒரு பெண்ணின் மேல் அன்பு  செலுத்த முடியும்.  அந்த  அன்பு  சக்தியை  அவளுடன் பரிமாறிக் கொள்ள முடியும்.  அதைப்போல,  பெண்கள் மகிழ்ச்சியாக, விளையாட்டுத் தன்மையில் இருக்கும் பொழுதுதான்,  ஒரு  ஆணின் மேல் அன்பு செலுத்த  முடியும்.  தன்னை சினைப்படுத்திக் கொள்வதற்கு அல்ல! ஆகவே,  உங்கள்  மகிழ்ச்சியில், ஆனந்தத்தில், அன்பு  உதயமாகட்டும். அதைப் பிறருக்கு  அப்படியே  அளியுங்கள்.
           ஆகவே,  விளையாட்டுத் தன்மை உங்களை ஆக்கிரமிக்கட்டும். ஒரு உண்மையான காதலர்களிடம், மிகுந்த  விளையாட்டுத் தன்மையைப் பார்க்கலாம்.  எப்பொழுது அந்த  உயிர்த்துடிப்புள்ள விளையாட்டுத் தன்மை மறைகிறதோ, அப்பொழுதே அவர்கள் கணவனாகவோ அல்லது  மனைவியாகவோ மாறிவிடுகிறார்கள்!. அவர்களிடம் உண்டான இயல்பான காதல் மற்றும்  அன்புத்தன்மை மறைந்து விடுகிறது.
தந்த்ரா கூறுகிறது:
         நீங்கள்  ஒரு பெண்ணிடம், அன்பு  செலுத்தும்பொழுது, உங்களிடம்  மகிழ்ச்சியும் ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது.  இந்த  உணர்வுகளுக்கும், அந்தப் பெண்ணுக்கும் எந்த  சம்மந்தமும் கிடையாது.  அவள் வெளியே ஒரு  கருவியாக மட்டும்  செயல்படுகிறாள். ஆனால்,  இந்த  உணர்வுகள்  உங்கள்  உள்ளே நிகழுகிறது. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.  இதனால்,  அவள் எந்த ஆனந்தத்தையும் அடைவது இல்லை. அவளும், உங்களைப் போல உங்கள்  மீது  அன்பு கொண்டிருந்தாலன்றி, அவளிடம்  எந்த  மாற்றமும்  ஏற்பட வழியில்லை.  ஆக, உணர்வுகள், ஆனந்தம் என்பவைகள் ஒருவரின் தனிப்பட்ட அனுபவமாகிறது. உங்களிடம் ஏற்படும் மாறுதலை, அவள் கவனிக்கலாம். அதைப்போல அவளிடம் ஏற்படும்  மாறுதலை நீங்கள்  கவனிக்கலாம். ஆனால்,  அவளால் அல்லது  உங்களால் அந்த அனுபவத்தில்  கலந்து  கொள்ள முடியாது.  அதைப்போல, நீங்கள்  இருவருமே, ஒரே நேரத்தில்  அந்த உச்ச இன்பத்தை அடைந்தாலும்,  அந்த அனுபவம் தனித்தனியானதே. நீங்கள்  இருவரும் வெறும் பார்வையாளராகவே இருக்கலாம். பங்கு கொள்ளுபவராக அல்ல. இன்னும்  கொஞ்சம்  சுருக்கமாகச்  சொன்னால்,  ஒவ்வொருவருடைய உச்சக்கட்ட  இன்பம் என்பது  'சுய இன்பம் ' ( Masterbation) காண்பதையே ஒக்கும். இதற்கு, பெண்ணுக்கு ஆணும்,  ஆணுக்கு பெண்ணும்  உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள், ஒரு  தூண்டுதலாக இருக்கிறார்கள்.  அவ்வளவுதான்.
          அடுத்ததாக, தந்த்ரா சொல்லிய முக்கிய கருத்துகளில் ஒன்று  என்னவென்றால், ஒருவரது உச்ச இன்பத்திற்கும், அவரது பால் உணர்வு அங்கத்திற்கும் சம்மந்தமே இல்லை. அது உங்கள் மூளையில்  நடக்கும்  நிகழ்ச்சி. பால் உணர்வு அங்கம் என்பது ஒரு ஆரம்பத் தூண்டுதல். உங்கள்  மூளைதான் பிரதானம். பால் உணர்வு அங்கம் என்பது  ஒரு கருவிதான். இதை நவீன விஞ்ஞானம்  ஒத்துக்கொள்கிறது.
         டெகல்டோ என்ற மனநல வல்லுனரைப் பற்றி, நீங்கள்  கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அவர் ஒரு சிறிய  மின்சார கருவியைச் செய்து,  எட்டி நின்று இயங்கும்படி (Remote control )  அமைத்திருந்தார். அதில் ஒரு  பட்டனை அமுக்கி,  உங்களிடம்  பால் உணர்வைத் தூண்ட முடியும்.  அதில்  உச்ச இன்பத்தை நீங்கள்  அடைய முடியும்.  அதற்கும், உங்கள்  பால் உணர்வு  அங்கத்திற்கும்  எந்த  சம்பந்தமும் கிடையாது.  அது, நேராக உங்கள்  மூளையில்  வேலை  செய்கிறது.  அங்கு,  அது  உங்களுடைய  பால் உணர்வு  சக்தியைத் தூண்டி  விடுகிறது.  அதைப் போல, இன்னொரு பட்டனை அமுக்கினால்,  நீங்கள்  மிகக் கோபம்  அடைவீர்கள்.   அதைப் போல வேறு ஒரு  பட்டனை அமுக்கினால், , நீங்கள்  சோர்வாக உட்கார்ந்து  விடுவீர்கள்.  ஆக, உங்கள்  உணர்வுகளை, இந்த  பட்டன்கள், நிர்ணயிக்கின்றன. இதைப் போலத்தான் பெண்ணும், மற்ற மனிதர்களும், பட்டனாக இருக்கிறார்கள்!  இதை மீண்டும்  சிந்தித்துப் புரிந்து  கொள்ளுங்கள்.
         இந்தப் பரிசோதனையை, டெல்காடோ, எலிகளை வைத்து  ஆராய்ச்சி  செய்யும் பொழுது,  மிகவும்  ஆச்சரியம்  அடைந்தார்.  ஆகவே, நவீன விஞ்ஞானம்  சொல்வதற்கும், தந்த்ரா சொல்வதற்கும் எந்தவித வித்தியாசமும்  இல்லை.  இன்பம்  மற்றும்  மகிழ்ச்சி  என்பது  உங்கள் உள்ளே  நிகழ்கிறது.  முதலில்,  அதற்கும் ஆணுக்கும்  அல்லது  பெண்ணுக்கும்  சம்மந்தம் இல்லை. அடுத்தது, அதற்கும் பால் உணர்வு  சக்திக்கும் சம்மந்தம் இல்லை.   ஒரு  பெண்,  உங்களுடைய  பால் உணர்வு  சக்தியை தூண்டும்  கருவியாக இருக்கிறாள். அந்தத் தூண்டப்பட்ட சக்தி, உங்கள்  மூளையின் ஒரு  பாகத்தில்  உள்ள  சக்தியை எழுப்புகிறது. அடுத்து,  அந்த உச்சக்கட்ட இன்பமும்  அந்த மூளையின்  எழுப்பப்பட்டப் பகுதியில்தான் நிகழ்கிறது.  உங்கள்  ஆண்குறியிலோ அல்லது  பெண்குறியிலோ அல்ல. ஆனால், அவைகள் மிகவும்  சக்திவாய்ந்த  தூண்டுகோலாக இருக்கின்றன.

- OSHO_Tamil

Comments