கவலை உணர்வு - OSHO
கவலை உணர்வு...
நீங்கள் கவலையோடு இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக அதை தீர்க்க முயற்சிப்பீர்கள்.
அதற்கு என்ன மாற்று என்று முயற்சிப்பீர்கள். மேலும் அதுப்ற்றியே சிந்தித்து அதிலேயே அதிகம் மூழ்கிப்போவீர்கள். சிந்திப்பதால், நீங்களே மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிக் கொள்வீர்கள்.
சிந்திப்பதால் கவலையை தீர்க்க முடியாது.
சிந்திப்பதால் கவலை நீர்த்துப் போகாது. காரணம் சிந்திப்பதே கூட கவலைக்கு காரணமான ஒன்று தான்.
கவலையாக இருக்கும்போது எதுவும் செய்யாமல் இருப்பது தான் சிறந்த வழி.
வெறுமனே விழிப்புணர்வுடன் இருங்கள்.
போகுஜு என்ற ஜென் தத்துவ ஞானியைப் பற்றிய ஒரு துணுக்குக்கதை கூறுகிறேன்.
அவர் ஒரு குகையில் வசித்து வந்தார். பகலிலோ அல்லது இரவிலோ கூட சில வேளை " போகுஜூ" என்று தன் பெயரை சத்தமாக கூறுவார்.
பிறகு அவரே, "ஆமாம், நான் இங்கு இருக்கிறேன்" என்று கூறுவார்.
அங்கு யாரும் இருக்கமாட்டார்கள்.
அவருடைய சீடர்கள், " ஏன் உங்கள் பெயரையே சத்தமாக அழைக்கிறீர்கள், பிறகு நான் இங்கு இருக்கிறேன் என்றும் கூறுகிறீர்கள்" என்று அவரிடம் கேட்டனர்.
போகுஜு கூறினார்," நான் சிந்தனைக்குள் போகும்போது, நான் என்னை விழிப்புணர்வுடன் இருக்க நினைவுபடுத்த என் பெயரை அழைக்கிறேன்,
என் பெயரை அழைத்து விட்டு பிறகு நான் இங்கு இருக்கிறேன் என்றும் கூறும்பொழுது, என் சிந்தனை, என் கவலை மறைந்துவிடுகிறது".
பிறகு அவருடை கடைசி நாட்களான இரண்டு அல்லது மூன்று வருடங்கள், தன் பெயரை அழைக்கவும் இல்லை, பிறகு அதற்கு அவர் பதில் கூறவும் இல்லை.
சீடர்கள் கேட்டார்கள், " குருவே, இப்பொழுதெல்லாம் அவ்வாறு செய்வதில்லையே" என்று கேட்டனர்.
குரு சொன்னார், " ஆனால் போகுஜூ எப்பொழுதும் இங்கேயே இருக்கிறான், அதனால் அழைக்கத் தேவையில்லை. இதற்கு முன், நான் அவனை வழக்கமாக இழந்து (மறந்து) விடுவேன். கவலை என்னை மறக்க செய்துவிட்டது, கவலை மேகத்தால் மறைத்துவிட்டது. அதனால் போகுஜூவை நினைவுபடுத்த வேண்டியிருந்தது. கவலை இப்பொழுது மறைந்துவிட்டது".
நீங்களும் மிகுந்த கவலையில் இருக்குபோது, வெறுமனே "உங்கள் பெயரை அழையுங்கள், பிறகு - நான் இங்கு இருக்கிறேன்" என்று கூறுங்கள்.
அதன்பிறகு வித்தியாசத்தை உணருங்கள். கவலை அங்கு இருக்காது.
குறைந்தபட்சம் ஒரு முறையேனும் மேகத்தை ( கவலையை) கடந்த பார்வை கிடைக்கும். அந்த பார்வையானது மிகவும் ஆழமானதாகவிடும்.
நீங்கள் ஒரு முறை விழிப்புணர்வாக மாறுகையில் கவலை அங்கு இல்லை, அது மறைந்துவிட்டது என்பதை உணருவீர்கள்.
உங்களது மையத்தை தொட்டுவிட்டீர்கள் என்பது உங்களுக்கு தெரியவரும்.
🌷ஓஷோ🌷
-OSHO_Tamil
Comments
Post a Comment