Google

உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - OSHO



💞 உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்.

ஒவ்வொரு விநாடியும் மிக இயல்பாக
முழுமையாக வாழுங்கள்.

எப்படி நான் முழுமையாக வாழவது.......???

நீங்கள், அதன் செயல்பாட்டில் எந்த குறுக்கீடும் செய்யாமல் இருந்தாலே போதும்.

நீங்கள் அந்த வாழ்வுக்கு பூரண சுதந்திரம் கொடுத்தால் , அந்த வாழ்வு தன்னை கடந்து செல்ல உங்களை அனுமதிக்கும்.

இந்த பள்ளத்தில் நீங்கள் முழுமையாக
இருந்தால், ஒரு நாள் சிகரத்தின் உச்சிக்கு செல்லலாம்.

நீங்கள் சிகரத்தின் உச்சிக்கு சென்றால் இந்த பள்ளம் மறைந்து விடும்.

இந்தப் பள்ளமும் அழகு வாய்ந்ததுதான்

அதில் முழுமையாக இருந்தால், அதன் உச்சியின் அழகை ரசிக்க முடியும்.

இந்த இரண்டின் அழகையும் இரசிக்க கூடியவராக இருக்க வேண்டும் என்பதே
என் விருப்பம்.

முதலில் பள்ளத்தில் முழுமையாக இருக்கவும்.

உச்சிக்குத் தன்னாலேயே செல்லுவீர்கள் 💞

💕 ஓஷோ 💕
- OSHO_Tamil

Comments