சக்தி எப்போதும் அன்பு என்கிற பொருளைத் தேடித்தான் ஓடுகிறது - OSHO
சக்தி எப்போதும் அன்பு என்கிற பொருளைத் தேடித்தான் ஓடுகிறது.
எப்போதெல்லாம் உங்கள் சக்தி எங்கோ தடைப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் அன்புதான் சக்தியை ஓடவைக்கிற ரகசியம்.
அன்பான ஒரு பொருளை தேர்ந்தெடுங்கள். எந்தப் பொருளாக வேண்டுமானாலும்
இருக்கட்டும். அது ஒரு காரணம் அவ்வளவுதான்.
நீங்கள் ஒரு மரத்தை அன்போடு தொட்டால்கூட அந்த சக்தி பாயத்துவங்கும்.
காரணம் எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ,
சக்தி அதை நோக்கிபாயும். தண்ணீர் கீழ்நோக்கி பாய்வதைப்போல, நீர் கடல் இருக்கிற பக்கத்தை தெரிந்துகொண்டு கடலின் எல்லையை நோக்கி நகரத்துவங்கும்.
எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ,
சக்தி அந்த `அன்பின்எல்லை’ யை அறிந்துகொண்டு அதை நோக்கி நகரும்.
- ஓஷோ
-OSHO-Tamil
Comments
Post a Comment