Google

ஒரு குமாஸ்தா கடிதம் ஒன்றைப் படிக்கும்போது - OSHO



ஒரு குமாஸ்தா கடிதம் ஒன்றைப் படிக்கும்போது, தனது விரல்களால் காதை அடைத்துக்கொண்டு சப்தமாகப் படித்தார். அதுபற்றி விசாரித்தேன்.

கடிதம் கொண்டுவந்தவரின் விருப்பத்தின்படியே தான் அவ்வாறு நடந்து கொண்டதாக குமாஸ்தா சொன்னார். கடிதம் கொண்டுவந்தவர், வேறு யாரும் தனது கடித வாசாகங்களைக் கேட்டு விடக்கூடாது என்று கூறியதால் காதை அடைத்துக் கொண்டதாக குமாஸ்தா விளக்கினார்.

கடிதம் வாசித்துக்காட்டும் குமாஸ்தா காதைப் பொத்திக்கொண்டு உரத்த குரலில் படிக்கிறார்.!

இப்படியான காரியம்தான் நமது தினசரி வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது. ஒளிந்துகொள்ள நீங்கள் செல்கிறீர்கள். ஆனால் அதுபற்றிய எல்லா விபரங்களும் தொடர்ந்து சப்தமாக அறிவிக்கப்பட்டு விடுகின்றன.

நீங்கள் தொடர்ச்சியான ஒலிபரப்பு செய்யும் நிலையமாக இருக்கிறீர்கள்.

ஒருவர் சிறிதளவு விழிப்புடன் இருந்தால் அவர் மறைத்துக் கொள்ள முயல்வதை நிறுத்திவிடுவார். அது பயனற்ற வேலை. நகைப்புக்கு இடமான காரியம்.

ஒளிந்து கொள்வதை நிறுத்துபவர் அமைதியடைகிறார். ஒளியும்போது நீங்கள் பதட்டம் அடைகிறீர்கள். உங்களைப் பற்றி யாராவது தெரிந்து கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் சதா இருந்து கொண்டிருக்கும்.

--ஓஷோ--
-OSHO_Tamil

Comments