Google

முதிர்ச்சியற்ற மனது எப்போதுமே பொறுப்பை அடுத்தவர் மீதுதான் போடும்.- OSHO



💐❤முதிர்ச்சியற்ற மனது எப்போதுமே பொறுப்பை அடுத்தவர் மீதுதான் போடும். நீங்கள் மகிழ்ச்சியற்று இருந்துவிட்டு, அதற்கு காரணம் மற்ற எல்லோருமே உங்களுக்கு நரகத்தை உருவாக்குவது தான் என்று நினைப்பதுதான். `மற்றவர் நரகம்’’ சாத்ரேயின் இந்த கருத்துகூட மிகவும் முதிர்ச்சியற்றது. நீங்கள் முதிர்ச்சியாக இருந்தால், அந்த மற்றவர்கூட சொர்க்கமாக முடியும். மற்றவர் என்பது ஒரு கண்ணாடிதான், எனவே நீ எப்படியோ அப்படியே அவர் தெரிவார். அவர் உன்னை பிரதிபலிப்பவர் மட்டுமே.
.
நான் முதிர்ச்சி என்று சொல்லும்போது, நான் உள்ஒருங்கிணைப்பை சொல்கிறேன். அடுத்தவரை பொறுப்பாக்குவதை நிறுத்தினால், உங்கள் அவதிகளை மற்றவர்கள் உருவாக்குகிறார்கள் என்று சொல்வதை நிறுத்தினால், உங்கள் அவஸ்தைக்கு நீங்கள்தான் காரணம் என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்தால் மட்டுமே அந்த உள்ஒருங்கிணைப்பு வரும். இதுதான் முதிர்ச்சிக்கான முதல்படி. நான்தான் பொறுப்பு, என்னவெல்லாம் நடக்கிறதோ, அதெல்லாமே நான் செய்தது என்ற உணர்வு வர வேண்டும்-


ஓஷோ
-OSHO_Tamil
❤💐

Comments