Google

மனதோடு கொண்டுள்ள அடையாளம் உடலோடு கொண்டுள்ள அடையாளத்தைவிட அதிக நுட்பமானது - OSHO



மனதோடு கொண்டுள்ள அடையாளம் உடலோடு கொண்டுள்ள அடையாளத்தைவிட அதிக நுட்பமானது.

மேலும் நாம் உயிர்பிழைத்திருக்க மனம் செய்து வரும் மகத்தான உதவியின் காரணத்தால் நாம் அதனோடு அடையாளம் கொண்டுள்ளோம் - விலங்குகளுக்கு எதிராகவும், இயற்கைக்கு எதிராகவும் மட்டுமல்ல.மற்ற மனிதர்களிடமிருந்தும் மனம் பாதுகாக்கிறது.

உனக்கு கூர்மையான, அக்கறை கொண்ட மனம் இருக்குமேயானால், நீ ஏனைய மனிதர்களை வெற்றிகொள்ளவும் செய்யலாம். நீ வெற்றி பெருவாய். நீ அதிகம் செல்வம் படைத்தவனாவாய்.ஏனெனில் நீ அதிகம் கணக்கு போடுபவனாகவும், அதிகம் தந்திரம் செய்பவனாகவும் இருப்பாய்.

மற்ற மனிதர்களுக்கு எதிராகவும் மனம் ஒரு ஆயுதமாயிருக்கிறது.ஆகவேதான் நாம் அதனோடு இந்த அளவுக்கு அடையாளப்பட்டு போயிருக்கிறோம் -இதை நினைவில் வையுங்கள்.

இறப்புக்கு எதிராக, நோய்க்கு எதிராக, இயற்கைக்கு எதிராக, விலங்குகளுக்கு எதிராக, மற்ற மனிதர்களுக்கு எதிராக, மனமே பாதுகாப்பளிப்பதாக இருக்கிறது.காப்பாற்றுவதாக இருக்கிறது.எனவேதான் நாம் நம்மை மனமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது வெளிப்படை.

யாராவது ஒருவர் உன்னிடம் உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் நீ அதனால் பாதிப்படைவது இல்லை. ஆனால் யாராவது ஒருவர் உன் மனநிலை சரியில்லை போலிருக்கிறது என்று சொன்னால் நீ பாதிக்கப்படுகிறாய்.உன்னால் தாங்க முடிய வில்லை.

உனது உடல் நிலை சரியில்லை என்றால் நீ அவமானமாய் உணர்வதில்லை ஏன்? நீ உடலோடு அடையாளம் கொண்டிருப்பதில்லை.

ஆனால் உனது மனம் சரியில்லை என்றால், யாராவது ஒருவர், உன் மனநிலை சரியில்லை என்று சொன்னால்,பையித்தியம் என்றால், நீ அவமதிப்பாய் உணர்கிறாய். ஏனெனில் இப்போது இது உன்னைப் பற்றிய விஷயம்;உன் உடம்பைப் பற்றியது அல்ல.

உடல் ஏதோ ஒரு வாகனம் போல, உனக்குச் சொந்தமான ஏதோவொன்றைப் போல நீ நடந்து கொள்கிறாய்.ஆனால் மனதோடு அப்படியல்ல. மனதோடு, நீயே மனம்;உடலோடு, நீ அதன் எஜமானன்.உடல் ஒரு அடிமை-நீ அதன் உரிமையாளன்.

மனம் உனது இருப்புணர்வில் ஒரு பிரிவினையை உண்டாக்கி விட்டது.

--ஓஷோ--
-Osho _Tamil

Comments