மெளனம் - OSHO
மெளனம் :
மெளனமாக இருப்பது மேலானது
ஆனால் ஒரு எச்சரிக்கை
மெளனமும் பேசும், பேசும், பேசும்
அப்படி பேசும்
வார்த்தைகள் தம் ஆற்றலை இழந்து
விடும் போது மெளனம் பேசும்
மெளனத்தால் சொல்ல முடியாதது
எதுவுமே இல்லை,,,
ஒரு வரி வெளிப்படுத்தாத பொருளை
இடைவெளி வெளிப்படுத்தி விடும்.
சூனியத்தால் தழுவ முடியாதது எது?
சொற்கள் தோற்றுபோகையில்
மெளனம் அர்த்தம் கனக்க நிற்கும்.
வடிவங்கள் முடியும் இடத்தில்
வடிவின்மை ஆரம்பமாகிவிடுகிறது
வேதங்கள் முடியும் இடத்தில்
வேதாந்தம் ஆரம்பமாகிவிடுகிறது
ஞானம் மடியும்போது
"அப்பால் "ஆரம்பிக்கிறது
சொல்லிலிருந்து பெறும் விடுதலையே
உண்மை,,, உண்மை,,, உண்மை.
ஓஷோ
ஒரு கோப்பை தேநீர்,,,,
-OSHO_Tamil
Comments
Post a Comment