முல்லா..பாருங்கள் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை - OSHO
எழுபது வயதான முல்லா நசுருதீன் தன் தொண்ணூறு வயதான தந்தையை அழைத்துக் கொண்டு ஒரு மனநல டாக்டரிடம் வந்தார்....
"டாக்டர்....எங்க அப்பா தினமும் நிறைய நேரம் பாத் ரூமில் ஒரு வாத்து பொம்மையை வைத்துக் கொண்டு தண்ணீரில் விளையாடுகிறார்" என்றார்....
டாக்டர் " முல்லா..பாருங்கள் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை....வயதானவர்கள் குழந்தை போல ஆகி விடுகிறார்கள்....அவர் பிறரை தொந்தரவு செய்யாத வரை இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை" என்றார்...
முல்லா "ஆனால் டாக்டர், அது என்னுடைய வாத்து பொம்மை" என்றார்....
ஓஷோ: மனிதன் எவ்வளவு வளர்ந்தாலும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறான்....
-OSHO_Tamil
Comments
Post a Comment