ஜென்னும் Sufi ம் (சூபி ) ஓஷோ சிந்தனையில்,,,- OSHO
ஜென்னும்
Sufi ம் (சூபி )
ஓஷோ
சிந்தனையில்,,,
ஜென்னும் சுபிசமும் இரு துருவங்கள்.
சுபிகள் மிகவும் அன்புடையவர்கள். மிகவும் அன்பு செலுத்துபவர்கள்.
மனித விழிப்புத் தன்மையின் வரலாற்றில் சுபிகள் போல தைரியமாக, முழுமையாக அன்பைப் பரிமாறிக் கொள்ளுபவர்கள் வேறு யாருமில்லை
அவர்கள் கடவுள் தன்மையை அல்லது கடவுளை காதலியாய் பாவித்து, உள்ளம் முழுக்க காதலாகி கசிந்து உருகுவார்கள்.
சொல்லப்போனால் பெண் தன்மைக்கு ஏற்ற சுபிசம்.
(Sufism).
ஜென் நேர்மாறுதல். ஆண் தன்மைக்கு ஏற்றது.
ஜென் சூன்யத்தை வலியுறுத்துகிறது.
பெளத்தத்தில் கடவுள் கொள்கை என்று ஏதும் இல்லை.. அதற்கு தேவையும் இல்லை.
மதங்களின் முக்கிய அம்சம் பிரார்த்தனை.
புத்த மதத்தில் ( ஜென்) பிரார்த்தனையோ, மந்திர ஜபமோ எதுவும் கிடையாது.
நீங்கள் வெறுமையாக சூன்யமாக இருக்க வேண்டும்.
இந்த சூன்யத்தன்மைக்கு உங்கள் கடவுள் எண்ணமோ, பிரார்த்தனையோ, ஜபமோதடையாக இருக்கும் என்று கருதுகிறது.
புத்த மதத்தின் சாரமே நீங்கள் சூன்யத்தில் இருப்பதுதான்."நீங்கள் "இல்லாத நிலையில் இருங்கள் என்று கூறுகிறது.
புத்தர் தன் மனித மனம் என்ற தன்மையில் ஆழமாக சென்று பார்க்கும் போது, அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிடமாக உள்ளது என்று கண்டறிந்தார்.
புத்தர் மனத்தின் உள்நோக்கி பயணம் செய்தார்.
அவர் மேலும் மேலும் மன ஆழத்திற்கு செல்லும் பொழுது, அந்த வெற்றிடம் அல்லது சூன்யம் மிகவும் பரந்து விரிவதைக் கண்டார்.
அந்த சூன்யத்தின் மையமே உங்கள் உயிர்த்தன்மைதான்.
அது ஒரு மகா வெற்றிடம். அவ்வளவுதான்.
அது தன் உணர்வாய், தன் அறிவாய், உன் விழிப்பாய் உள்ளது.
அது ஒரு புரியாத புதிர். நம் மனதிற்கு அப்பால் செயல்படுவது. அந்தத் தன்மையை இதுவரை யாரும் அறிந்ததில்லை.
இந்தியாவில் உள்ளத்தின் மையத்தை ஆத்மா என்று அழைத்தார்கள். ஆனால் யாரும் அதன் பரிமாணத்தை கண்டறியவில்லை.
புத்தர்தான் முதன் முதலில் உணர்ந்தார்.
ஆத்மா என்றும் உள்ளம் என்றும் உள்ளே எதுவும் கிடையாது. ஏன் அங்கே ஒன்றுமே இல்லை.
ஆகவே அதற்கு "அனாதா" என்று பெயரிட்டார்.
இதன் பொருள் "ஆத்மா இல்லை" என்பதே
அங்கு நீ இல்லை. ஆனால் இருப்பது போல் தோற்றமளிக்கிறது.
--ஓஷோ--
புல் தானாகவே வளர்கிறது,,
-OSHO_Tamil
Comments
Post a Comment