Google

தியானத்தின் சாரம். படிப்படியாக ஞானம் அடைதல் - OSHO



தியானத்தின் சாரம்.
படிப்படியாக ஞானம் அடைதல்
----------------------------------------
தியானம் என்பது
சாட்சி பாவத்துடன் இருப்பதே.

முதலில்

உடலின் செயல்கள் அனைத்திலும்
சாட்சியாக இருப்பது.

நடக்கும் போது நீங்கள் விழிப்புணர்வுடன் நடக்க வேண்டும்.

நான் என் கையை விழிப்புணர்வுடன் அசைக்கிறேன்.

விழிப்புணர்வில்லாமல்  என்னால் நகர்த்தவும் அசைக்கவும் முடியும்..

இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் பார்க்க முடியும்.

 விழிப்புணர்வுடன் செய்யும் போதும்

விழிப்புணர்வு இல்லாமல் செய்வதையும்.

விழிப்புணர்வுடன் செய்யும் போது அங்கே பதற்றமே இல்லை.

அதில் ஒரு கருணை ஒரு அழகு ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

ஒவ்வொரு உடல் செயல்மீதும் நாம் சாட்சியுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு நீங்கள் உடல் செய்கைகளில்

இயல்பாக சாட்சியுடன் இருந்து பழக்கமாகும் போது

நீங்கள் உங்கள் உடலை தனியானதாக பார்ப்பீர்கள்.

அடுத்து இரண்டாவது:

 நீங்கள் உங்கள் மனதை பார்க்க ஆரம்பியுங்கள்.

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள்

எந்த மதிப்பீடும் இடாமல் எவ்வித தீர்ப்பும் சொல்லாமல்.

சும்மா அசிரத்தையாக பெரிய முக்கியத்துவம் தராத பாவத்துடன்

 நீங்கள் மேலும் மேலும் ஒரு சாட்சியாக மட்டும் இருந்து

 உங்கள் எண்ணங்களை பார்க்கும்போது எண்ணங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

மூன்றாவது கட்ட்த்திற்கு நகர வேண்டும்.

இப்போது நீங்கள் உங்கள் உணர்வுகளை

உங்கள் மன நிலையை கவனியுங்கள்.

 இவைகள் மிகவும் ஆழமாக நுண்மையாக மறைந்திருப்பவை.

 நீங்கள் உங்கள் உணர்வுகளுக்கு

சாட்சியாக கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது

உணர்வீர்கள் அது தான் உங்கள் ”இதயம்”.

பின் நான்காவது நிலை

தானாகவே நிகழும்.
அந்த நிலையை நீங்கள் எடுக்க வேண்டியது இல்லை.
முயற்சி தேவையில்லை.
முதல் மூன்று கட்டங்கள் நீங்கள் செய்ய வேண்டியது
மூன்றாவது கட்டம் நிறைவாகும்போது.
திடீரென்று ஒரு நாள் ஒரு பெரிய தாவல்

உங்கள் உள்ளுணர்வில் உங்களுக்குள் நிகழும்.

எல்லாம் மறைந்து உங்கள் உள்ளுணர்வு மட்டும் மிச்சம் இருக்கும்.
உள்ளுணர்வை மட்டுமே உணர்வீர்கள்.
அறிதலை மட்டுமே அறிவீர்கள்.
பின் மிகவும் முழுமையான அமைதி.

ஆனால் அந்த அமைதி வெறுமையானதல்ல.

முழுவதும் ஒளி நிரம்பியது.

முழுவதும் இனிய வாசம் நிரம்பியது.

முழுவதும் இன்பமயமானது.

இதைத்தான் நான் ஞானம் அடைதல் என்பேன்.

தியானம் ஒரு வழி.

ஞானம் அதன் அடைதல் அதன் வெற்றி.

--- ஓஷோ ---
-OSHO_Tamil

Comments