ஒரு ஜெயின் துறவி எந்த விஷ உணவுகளையும் உண்பதில்லை - OSHO
❤🙏ஒரு ஜெயின் துறவி எந்த விஷ உணவுகளையும் உண்பதில்லை. எந்த அசைவ உணவையும் உட்கொள்வதில்லை. ஆனால் அவர் மனம் களங்கப்பட்டிருக்கிறது. ஜெயினிசத்தினால் விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எல்லாக் கொள்கைகளிலிருந்தும் விடுதலை பெறுவதுதான் உண்மையான விடுதலை. எந்தக் கொள்கையுமில்லாமல் நீங்கள் சும்மா இருக்க முடியாதா? கொள்கைகள் தேவையா? ஏன் கொள்கைகள் அப்படி தேவைப்படுகின்றன? அது தேவைப்படுவதற்குக் காரணம் அது உங்களை முட்டாளாகவே வைத்திருக்கிறது. அது தேவைப்படுகிறது. காரணம் அது உங்களுக்குத் தயார் செய்யப்பட்ட பதில்களைத் தருகிறது. அதை நீங்களாகவே சொந்தமாகக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை.
ஒரு புத்திசாலியான உண்மை மனிதன் எந்தக் கொள்கையிலும் தன்னைக் கட்டிப் போட்டுக் கொள்ளமாட்டான். எதற்கு? அவன் ஒரு மூட்டை தயார் செய்யப்பட்ட பதில்களை வைத்துக் கொண்டிருக்க மாட்டான். அவனுக்குப் போதிய புத்திசாலித்தனம் இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியுமே. எந்த மாதிரி சூழ்நிலை வந்தாலும். அவன் அதற்கு பதில் சொல்வான். ஏன் கடந்த காலத்திலிருந்து ஏற்றிய மூட்டைகளைச் சுமுக்க வேண்டும்? இவர் சுமப்பதினால் என்ன பயன்?
ஓஷோ (மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை பக்கம் 210)❤🙏
--OSHO--
-OSHO_Tamil
Comments
Post a Comment