ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஆபத்து எது ? - OSHO
ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஆபத்து எது ?
ஆன்மீக வளர்ச்சிக்கு முற்றிலும் மாறுபட்ட,
ஆனால் ஒன்று போலிருக்கும் விஷயங்களால் தான் உண்மையிலேயே ஆபத்து நேரிடும்.
வேறுபட்டது போல் தோன்றும் பொருட்களால்
உண்மையில் ஆபத்து நேரிடுவது இல்லை.
பார்ப்பதற்கு வேறுபட்டவை போல் தோன்றாமல்,
ஆனால் முற்றிலும் வேறுபட்டிருப்பவற்றால் தான் ஆபத்து நேரிடுகிறது.
வெறுப்பின் உண்மையான எதிர்பதம் அன்பு அல்ல.
அன்பின் உண்மையான எதிர்பதம் வெறுப்பு அல்ல.
அன்பின் உண்மையான எதிர்பதம் போலியான அன்பு:
அன்பு போல் நடிக்கும் அன்பு.
ஆனால் அன்பல்ல,
ஒருவர் இங்குதான் கவனமாயிருக்க வேண்டும்.
இரக்கத்தின் உண்மையான எதிர்பதம் கோபம் அல்ல.
இரக்கத்தின் உண்மையான எதிர்பதம் விதைக்கப்பட்ட இரக்கம்.
இரக்கம் உங்களுக்குள் இல்லை,ஆனால் நடத்தையாக இருக்கிறது.
உங்கள் வட்டத்திற்குள் நீங்கள் தீட்டிக்கொண்ட இரக்கம்.
புன்னகையின் உண்மையான எதிர்பதம் கண்ணீர் அல்ல.
ஆனால் வரையப்பட்ட புன்னகை,
உதடுகளைத் தவிர வேறெங்கும் ஆழமாய்ச் செல்லாத புன்னகை
உதடுகளின் உடற்பயிற்சி தவிர வேறொன்றுமில்லை.
இதயம் அவற்றுடன் இனையவில்லை.அதற்குப் பின்னால் எந்த உணர்ச்சியுமில்லை.அந்த புன்னகைக்குப் பின்னால் யாருமில்லை.
அந்தப் புன்னகை கற்றுக்கொண்ட ஒரு தந்திரம்.
கண்ணீர்,புன்னகைக்கு எதிர்பதம் அல்ல,அவை இனைந்திருப்பவை.
பொய்யான புன்னகை என்பதுதான் உண்மையான எதிர்பதம்.
உண்மைக்கும்
நடிப்புக்குமிடையேதான் முரண்பாடு.
--ஓஷோ--
- OSHO_Tamil
Comments
Post a Comment