வழிபாடு வலியுறுத்துவது சரணாகதியே ஓஷோ - OSHO
வழிபாடு
வலியுறுத்துவது
சரணாகதியே
ஓஷோ,,,,,
நீங்கள் பார்ப்பதெல்லாம் உங்களுக்குள் ஓர் எதிரொலியை ஏற்படுத்தி விடும்.
ஆழ்ந்த பொருளில், நீங்கள்,
எதைப் பார்க்கிறீர்களோ
அதுவாக ஆகிவிடுவீர்கள்.
புத்தர் சிலைகள் எல்லாமே மற்றவர் இதயங்களில்கருணையை ஏற்படுத்தத்தான் அதுதான் அவரது உள்ளார்ந்த செய்தி.
உங்களிடம் கருணை இருந்தால், நீங்கள் எல்லாம் பெற்றவர்,’ என்று புத்தர் கூறினார்.
கருணை என்றால் என்ன?
அது அன்பு அன்று.
அன்பு, வரும் போகும்.
கருணை, வந்தால் போகாது மற்றவரிடம் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கும் நுட்பமான ஆசை அன்பில் மறைந்திருக்கிறது.
ஆனால், கருணையில், கொடுப்பதற்கு
யாரிடமும் எதுவும் இல்லை என்ற
விழிப்புணர்வு அடங்கியிருக்கிறது.
கருணையில், வேண்டிப் பெறும் எண்ணம் இல்லை.
அந்த நிலையில் கொடுப்பதற்கான ஆசைகூட எழுவதில்லை.
கருணையால் இதயத்தின் எல்லா வாசல்களும் திறந்து கொள்ளும்.
இயல்பாகவே ஏதாவதொன்றை அது வினியோகிக்க ஆரம்பித்துவிடும்.
நீங்கள் தியானம் செய்தாலும் வழிபாடு நடத்தினாலும் எவ்வித அமைதியைப் பெறுகிறீர்களோ, அதை உடனே மற்றவர்க்கு வழங்கி விடுங்கள்!” என்று புத்தர் கூறினார்.
ஒரு கணம்கூட அதை சொந்தத்திற்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.
அப்படிச் செய்தால் நீங்கள் சமயவாதியே அல்ல.
தியானத்தின் பிறகு உங்களிடம் நிறைய மகிழ்ச்சி ஏற்பட்டால், தேவைப்பட்டவர்
களுக்கு வழங்கி விடுங்கள். உங்கள் இதய வாசல்கள் திறந்துகொள்ளட்டும்.
மகிழ்ச்சியெல்லாம் தேவையானவர்களை நோக்கிப் பாயட்டும்.
மலையிலிருந்து கீழே பாய்ந்து வரும் தண்ணீர்போல,” என்றார் அவர்.
மாபெரும் கருணையே இறுதி விடுதலை’’ என்றார் புத்தர்.
அதனால்தான் புத்தர் சிலைகள் கருணை வடிவில் உருவாக்கப்பட்டன.
அந்தச் சிலைகளின் முன்னால் அமர்ந்து வழிபடும் ஒருவர், அவரது கருணையின் ஒத்ததிர்வைத் தமக்குள் பெறுவார்.
ஆனால், புத்தர் சிலையை எவ்வாறு வழிபடுவது?
உங்களுக்குத் தெளிவுபடுத்த ஒரு சான்றை விளக்குகிறேன். புத்தர் சிலையை வழிபட வேண்டு மானால், வழிபாட்டின் மையம் இதயமாக இருக்க வேண்டும்.
இது விளங்காவிட்டால், புத்தர் சிலையைப் புரிந்துகொள்ளவே முடியாது.
ஏனென் றால், அதன் முக்கிய நோக்கமே உங்களுக்குள் கருணையை உருவாக்குவதுதான்.
கருணையின் மையம் இதயம்தான்.
அதனால், புத்தரை வழிபடுகையில், நமது விழிப்புணர்வு அவரது இதயத்தின்மேல் இருக்க வேண்டும்.
ஒரு பக்கம் அவரது இதயத்தின் மேலும், மறுபக்கம் நமது இதயத்தின் மேலும் இரண்டு இதயங்களும் ஒரே தாளகதியில் துடிக்கும்.
ஆழத்திற்குள் நீங்கள் பாய்ந் துவிட வேண்டும்.
உங்கள் இதயத்திற்கும், புத்தர் சிலைக்கும் இடையில் ஒரு கயிறு பிணைக்கப்பட்டிருப்பதை உணரும் நேரம் ஒன்று வரும்.
உணர்வது மட்டுமல்ல, அந்தச் சிலையின் இதயம் துடிப்பதை, உங்கள் திறந்த கண்களால் பார்க்கலாம்.
அது நிகழும்போது, அந்தச் சிலைக்கு உயிர் வந்துவிடுவதையும் உணரலாம்.
இல்லாவிட்டால் அதற்கு உயிர்தான் ஏது?
அதை வழிபடுவதில்தான் என்ன அர்த்தம்?
உங்கள் இதயத் துடிப்பிற்கேற்ப, சரியான முறையில் தியானம் செய்தால், புத்தர் சிலையின் இதயம் துடிக்கும்.
ஓஷோ.
Osho_Tamil
Comments
Post a Comment