Google

ஜென் மக்களைப் பாருங்கள் (நிறைவு) - OSHO



ஜென் மக்களைப் பாருங்கள். ஒரு தேநீரைக் கூட அதே கொண்டாட்டத்தோடு, சம்பிரதாயமாக குடிப்பார்கள். ஒரு விழிப்புணர்வோடு. அந்த சாதாரண தேநீர் கூட ஏதோ ஒரு நிகழ்வாக மாறும். சாதாரண தேநீர் கூட மாறிவிடும். சாதாரண விஷயங்களைக் கூட மாற்றிவிடும். சாதாரண செயல்கள் மாறிவிடும். ஒரு காலை நேர நடை பயிற்சி கூட போதையைக் கொடுக்கும். அந்தக் காலை நடை பயிற்சி உங்களுக்கு போதையைக் கொடுக்காவிட்டால் உங்களிடம் தான் ஏதோ ஒரு கோளாறு. ஒரு ரோஜா மலரைப் பார்த்துக்கொண்டிருந்தால் கூட போதைதான்.  அது உங்களுக்கு போதை கொடுக்காவிட்டால், வேறு எதுவுமே உங்களுக்கு போதை கொடுக்க முடியாது. ஒரு குழந்தையின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதை வரும்.
        இந்தத்  தருணத்தில் எப்படி சந்தோசமாக இருப்பது என்பதைக் கற்று கொள்ளுங்கள். முடிவுகளுக்காகக் காத்திருக்காதீர்கள். அப்படி எதுவுமேயில்லை. வாழ்க்கை எங்குமே போவதில்லை. அதற்கு முடிவே கிடையாது. எந்த முடிவுக்கான வழியுமில்லை வாழ்க்கை. வாழ்க்கை இப்போது இங்கேயிருக்கிறது. வாழுங்கள். மொத்தமாக வாழுங்கள். உள்ளுணர்வோடு வாழுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள், உங்களுக்குள் ஒரு நிறைவு வரும்.

                அந்த நிறைவை ஒத்திப்போடக்கூடாது. இல்லையென்றால் உங்களுக்கு நிறைவே வராது. நிறைவு என்பது இப்போது, இப்போது இல்லையென்றால் எப்போதுமில்லை.

 ஓஷோ (மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை )
OSHO_Tamil

Comments