Google

♥ லாவோட் சூ கூறுகிறார் - OSHO ♥



♥ லாவோட் சூ கூறுகிறார்

எதுவும் செய்யாமல் செய்து கொண்டு இருப்பது தான்

செயலற்ற செயல் என்பதாகும்

கடவுளை நினைத்திருப்பது சிறந்தது

ஆனால் உன்னை மறக்காமல் கடவுளை
நினைத்து இருப்பதில்
ஒரு முழுமை இருப்பதில்லை

கடவுளைப் பற்றிய அதீத அக்கறையும்
கவலையும்

இல்லாதவனை நோக்கி கடவுள் வருகிறார்

கடவுளுக்காக காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை

புற உலகில் மிக மென்மையான பொருள் தண்ணீர்

அக உலகில் மிக மென்மையான பொருள் அன்பு

நீ அகந்தை கொண்டவனாக இருந்தால்

அன்பு உன்னை நிறைக்க ஒடி வராது

எதிர்ப்பு காட்டாத உன் இயல்பு தண்ணீரைப் போல

மென்மையாக இருக்கட்டும்

தண்ணீர் எந்த வடிவம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும்

ஆனால் எந்த வடிவத்திலும் அது தன்னை இழப்பதில்லை

இறுகிப் போன பொருள்கள் தன் வடிவத்தைப் பிடித்து

தொங்கிக் கொண்டு இருக்கின்றன

தானாக நடப்பவை எதையும் செய்து சாதிக்க முடியாது

ஜீவிதம் மிகப் பிரமாண்டமானது உன்னுடைய எல்லைக் கோடுகள்

அனைத்தையும் தகர்த்து எறிந்து விடும் ஜீவிதம்

கடவுளைத் தேடாதே பரவசமும் ஆனந்தமும் உன்னைப்

பிடித்துக் கொள்ளும் சூழலைத் தேடு

மௌனத்தை ஒருவர் உணர்ந்து வாழ்வது

மௌனத்தில் ஒருவர் அதுவாகிப் போவது

இவற்றை செயல் மூலம் சாதிக்க முடியாது

செயல் கழிந்த மௌனத்தில் ஆழும் போதுதான் அதை சாதிக்க முடியும்

முழுமை உன் மூலம் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது

நீ வெறும் புல்லாங் குழல்

இசை எல்லாம் அவனுடையது

செயல் புரியும் போது செயல் அவனுடையது என்பதை உணர்ந்திடு

நீ வெறும் கவனிப்பவன் சாட்சியாக இருப்பவன்

அப்போது செயல் கழிந்த நிலை செயலுக்கு வந்து சேர்ந்து விடுகிறது

செயலும் செயல் கழிந்த நிலையும் ஐக்கியமாகிப் போகிறது ♥

⛩ ஓஷோ
தாவோ
மூன்று நிதியங்கள் II ⛩
-OSHO_Tamil

Comments