உடலுறவில் நீங்கள் ஈடுபடும்பொழுது - Osho
உடலுறவில் நீங்கள் ஈடுபடும்பொழுது
உங்களது உடல் உங்களது கட்டுப்பாட்டை மீறும் ஓர் நிலை வரும்
அந்த கட்டுபாடற்ற நிலை கண்டு அஞ்சவேண்டியதில்லை.
அந்த கட்டுபாடற்றதே அழகானது.
உண்மையில் கட்டுப்பாடற்ற மனிதன்தான் அழகாக இருக்கமுடியும்.
ஒரு பெண் கட்டுபாடுடன் இருந்தால், அவள் அழகாக இருக்கமுடியாது, காரணம் அதிக கட்டுபாடில்லாமல் அவள் இருந்தால், அவள் அதிக உயிர்ப்புடன் இருப்பாள்.
அப்போது நீங்கள் காட்டில் ஓடும் முரட்டுபுலி அல்லது முரட்டுமான் போன்றவர். அதுதான் அதன் அழகு!
ஆனால் அதற்காக சுய நினைவற்று போக வேண்டும் என்பதல்ல விஷயம்.
.
ஆகவே ஒரு சாட்சியாவதற்கான நிகழ்வு முழுவதும், முறை முழுவதுமே, காமசக்தியை நிலைமாற்றமடைய செய்யும் செயல்பாடுதான். காமத்திற்குள் நுழைந்து எச்சரிக்கையுடன் இருப்பதுதான். என்ன நடந்தாலும், அதை கவனியுங்கள், அதன் மூலம் பாருங்கள். எந்த ஒரு விஷயத்தையும் விட்டு விடாதீர்கள். உங்கள் உடலில், உங்கள் மனதில், உங்கள் உள்சக்தியில், என்ன நடந்தாலும் ஒரு புதிய சுழல் இயக்கம் உருவாகிறது. உடல் மின்சாரம் ஒரு புதிய பாதையில் நகர்கிறது, ஒரு புதிய சுற்றில் நகர்கிறது. இப்போது இந்த உடல் மின்சாரம் என்பது சகாவுடன் இணைகிறது. இப்போது ஒரு உள்சுழல் இயக்கம் உருவாகிவிட்டது – நீங்கள் அதை உணரலாம். நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால், அதை நீங்கள் உணரலாம். நீங்கள் ஒரு பிரதான சக்தி நகர்வதற்கு நீங்கள் வாகனமாகி விட்டதை உணர்வீர்கள்.
.
எச்சரிக்கையாக இருங்கள். இன்னும் அதிகமான சுழல் இயக்கம் உருவாக உருவாக உங்களது சிந்தனைகள் குறைவது உங்களுக்குத் தெரியவரும். அவைகள் ஒரு மரத்திலிருந்து விழும் பழுத்த மஞ்சள் இலைகளைப்போல கழன்று விழுகிறது. எண்ண ஓட்டம் குறைகிறது, மனம் மேலும் மேலும் காலியாகிறது.
.
தொடர்ந்து எச்சரிக்கையாக இருங்கள், விரைவில் நீங்கள் இருக்கிறீர்கள், ஆனால் அங்கே ஆணவம் இல்லை. நீங்கள் நான் என்று சொல்லமுடியாது, உங்களைவிட சிறந்த ஏதோ ஒன்று உங்களுக்கு நடந்துவிட்டது. நீங்களும், உங்கள்சகா இருவருமே அந்த மாபெரும் சக்திக்குள் கரைந்துவிட்டீர்கள்.
.
ஆனால் இந்த இணைப்பு தன்னுணர்வற்று நடக்கக்கூடாது, இல்லையென்றால் நீங்கள் அந்த விஷயத்தையே இழந்து விடுவீர்கள் - பிறகு அது மிகவும் அழகான உடல்உறவு என்றாலும் அது நிலைமாற்றம் தராது. அது அழகானது, அதில் எந்த தவறுமில்லை. ஆனால் அது நிலைமாற்றமல்ல.. மேலும் அது தன்னுணர்வற்று இருந்தால் பிறகு எப்போதுமே அது ஒரு விதமாகவே போய்க் கொண்டிருக்கும். மறுபடியும், மறுபடியும் இந்த அனுபவம் வேண்டுமென்று நினைப்பீர்கள். அந்த அனுபவத்தைப் பொறுத்தவரை அது அழகானது, ஆனால் அதுவே ஒரு பழக்கமாகிவிடும். ஒவ்வொரு முறை நீங்கள் அந்த அனுபவத்தை பெறும்போதும், மறுபடியும் வேண்டுமென்ற ஆசை உருவாகிறது. நீங்கள் அதை பெறும் அளவு நீங்கள் அதற்காக ஆசைப் படுவீர்கள். நீங்கள் ஒரு விஷ வளையத்திற்குள் சுற்றி வருகிறீர்கள். நீங்கள் வளர மாட்டீர்கள், நீங்கள் சுழன்று கொண்டேயிருப்பீர்கள்.
.
நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால், முதலில், உடலின் உள்சக்தி மாறுவதை பார்ப்பீர்கள், இரண்டாவது, மனதிலிருந்து சிந்தனைகள் கழன்று விழுவதை பார்ப்பீர்கள். மூன்றாவது இதயத்திலிருந்து அந்த நான் என்ற உணர்வு செல்வதை பார்ப்பீர்கள்.
.
இந்த மூன்று விஷயங்களையுமே ஜாக்கிரதையாக பார்த்து, கவனிக்க வேண்டும். அந்த மூன்றாவது நடந்துவிட்டால், காமசக்தி என்பது தியானசக்தியாக மாறியிருக்கும். இனியும் நீங்கள் காமத்தில் இல்லை. நீங்கள் காதலியோடு ஒன்றாக படுத்திருக்கலாம், உடல் சேர்ந்திருக்கலாம், ஆனால் இனியும் நீங்கள் அங்கேயில்லை – நீங்கள் ஒரு புதிய உலகத்திற்கு தூக்கி செல்லபட்டு விட்டீர்கள்.
#ஓஷோ
ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 7- பாலியலும் அதன் தொடர்பானதும்
பகுதி-5 கட்டுபாடில்லாமல் இருந்து கவனி
Comments
Post a Comment