ஓசையற்ற ஓசை - ஓஷோ
ஓசையற்ற
ஓசை,,,
ஓஷோ
இதுவல்ல இதுவல்ல என்று
எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டே இரு
கடைசியில் எதுவுமே் மிஞ்சாதபோது
ஒரு பெரும் பிரளயம் பிறக்கும்,,,,
டோயோ" என்ற சிறுவன்,,, வயது பன்னிரண்டு .
தியானம் செய்ய அவன் விரும்பினான்.
எனவே மடாலய மணியை அடித்து விட்டு, உள்ளே சென்று ஜென் குருவின் முன்னாள் அமைதியாய் அமர்ந்து கொண்டான்.
கடைசியாக குரு அவனிடம் " டோயோ,, இரு கை ஓசையைக் காட்டு" என்றார்
டோயோ கைகளைத் தட்டினான்.
நல்லது இனி ஒரு கை ஓசையைக் காட்டு" என்றார்.
டோயோ மெளனமானான்.
கடைசியில் அவன் எழுந்து வணங்கி விட்டு மணியை ஒரு கையால் அடித்தான்.
அது தவறு" என்றார் குரு.
அவன் இரவு பகலாகய் சிந்தித்தான். முயன்றான். அவரிடம் தெரிவித்தான். பலனில்லை.
அவர் கேட்டதே அர்த்தமில்லாதது.
அதனால் அதற்கு விடையே கிடையாது
என்று அவன் நினைத்தான்.
கடைசியாக அவன் பதினோராம் நாள் இரவு சென்றான். ஏதோ சொல்ல முயன்றான்.
அவன் வாயைத் திறப்பதற்குள் "அதுவும்
தவறு தான் " என்றார் குரு.
அப்புறம் அவன் அங்கே போவதையே நிறுத்திக் கொண்டான்.
ஓராண்டு கழிந்தது. எத்தனையோ சிந்தனைகள். எண்ணங்கள் அவனுக்குத் தோன்றின.
அவற்றை அவனே ஒதுக்கி விட்டான்.
ஒதுக்குவதற்கு எதுவும் இல்லாதபோது
அவனுக்குள் ஒரு பூகம்பம் தோன்றியது.
அப்போது அவன் ஞானம் பெற்றான்..
அவனிடம் இப்போது எதுவுமே இல்லாததால்
குருவைத் தேடிச் சென்றான்.
மணியடித்து அறிவிப்பும் செய்யாமல்
அவர் முன் சென்று வணங்கி
அமர்ந்தான் மெளனமாய்.
சொல்வதற்கு அவனிடம் எதுவும் இல்லாததால் அந்த மெளனம்.
அப்போது ஜென் குரு கேட்டார்,,,
ஆகவே நீ ஓசையற்ற ஓசையைக்
கேட்டு விட்டாய்,,,இல்லையா ?" என்றார்.
ஓஷோ,,,
Comments
Post a Comment