பிற மதங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் இழிவாகப் பேசலாமா....???
❓கேள்வி : - பிற மதங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் இழிவாகப் பேசலாமா....???
❗பதில் : - " இரண்டு முட்டாள்கள் தங்களைத் தாங்களே இழிவு படுத்திக் கொள்ளுகிறார்கள்
இதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது....???" ❗
❓கேள்வி : - நம்மிடம் உள்ள கடவுளை எப்படித் தேடுவது....???
அவர் நமக்குள் எங்கே இருக்கிறார்....???
தயவுசெய்து புரியும்படி கூறவும்....???
❗பதில் : - " தியானம் ஒன்றே வழி
கடவுள்தன்மை உங்களிடம் எங்கும் நிறைந்திருக்கிறது
ஆனால் இதற்கு நீங்கள் உங்கள் மனத்தை அகற்ற வேண்டும்
அதற்கு நீங்கள் அதில் அடைத்து வைத்திருக்கும் எண்ணக் குப்பைகளை அகற்ற வேண்டும்
நீங்கள் ( மனம் ) மறையும்பொழுது
கடவுள் அதை நிரப்ப ஓடோடி வருகிறார்
ஆகவே காலியான மனம்தான் கடவுளின் இருப்பிடம்
கடவுள் உங்கள் காணிக்கையாக
உங்கள் எண்ணக் குப்பைகளைத்தான் கேட்கிறார்
பால், பழம், பூக்களை அல்ல ❗
❓கேள்வி : - என்னிடம் எல்லா கெட்ட குணங்களும் இருக்கின்றன
நான் தியானம் செய்யலாமா...???
❗பதில் : - " நீங்கள்தான் அவசியம் தியானம் செய்ய வேண்டும்
அப்பொழுதுதான் உங்கள் கெட்ட குணங்கள் படிப்படியாக அகலும்
இதற்குத் தியானத்தைத் தவிர வேறு வழியில்லை
நீங்கள் எந்த நீதி நூல்களைப் படித்தாலும்
கோவிலுக்குச் சென்று வேண்டினாலும் பிரயோஜனமில்லை
உங்களுக்குள்ளே சென்று அந்தக் கெட்ட குணங்கள் எங்கே இருக்கின்றன என்று தேடிப்பாருங்கள்
அப்பொழுது அது தானே
உங்களைவிட்டு ஓடிவிடும் கரப்பான்பூச்சிகள், கரையான்கள், எலிகள், வவ்வால் போன்றவை இருட்டில்தான் வாழும்
நீங்கள் "பிரக்ஞை" என்ற விளக்கை எடுத்துக்கொண்டு
உங்கள் உள்ளே செல்லும்பொழுது
அந்தக் கெட்ட எண்ணங்கள் வெளியே ஓடிவிடும் ❗
❓கேள்வி : - ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் அன்பு எப்படி இருக்க வேண்டும்....???
கடவுள் மீது அன்பு செலுத்துவது எப்படி...???
❗பதில் : - " அன்பு என்பது பிறரை நேசிப்பதுதான்
உள்ளத்தில் அன்பு இல்லாமல் பிறரை ஒருக்காலும் நேசிக்க முடியாது
ஆனால் இந்த உலகத்தில் அன்பு வியாபாரமாகி விட்டது
யாரும் கைமாறு கருதாமல் பிறர்மேல் அன்பு செலுத்துவது இல்லை
கணவன் மனைவிடம்
தன் உடலையும் நாக்கையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறான்
மனைவியோ தன் உடல்சுகத்தையும் பாதுகாப்பையும் கணவனிடம் எதிர்பார்க்கிறாள்
தாய் மகனிடம் தன் பிற்கால வாழ்வுக்கு ஊன்றுகோலாக ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்
இப்படி ஒவ்வொருவரும் பிறரிடம் எதையாவது எதிர்பார்த்துத்தான் அன்பு செலுத்துகின்றனர்
இதற்குப் பெயர் அன்பு இல்லை
ஒரு வியாபார பரிமாற்றம் ❗
❓அப்படி என்றால் உண்மையான அன்பு என்றால் என்ன....???
இதை யாரிடம் எதிர்பார்க்கலாம்.. ???
❗இந்த உலகத்திலிருந்து எதையுமே எதிர்பார்க்காத ஒரு உண்மையான ஞானியின் அன்புதான் உண்மையானது
நீங்கள் உங்களையே நேசித்தால்
அன்பு செலுத்தினால்
அது கடவுளுக்குச் செய்யும் அன்புதான்
ஏனென்றால்
நீங்கள்தான் கடவுளின் அம்சம்
ஞானிகளிடம் அது மலர்ந்திருக்கிறது
உங்களிடம் அது கருவின் நிலையில் இருக்கிறது
ஞானி அதை அடையாளம் கண்டுகொண்டுவிட்டான்
உங்களால் அது முடியவில்லை
அவ்வளவுதான் வித்தியாசம் ❗
♥ ஓஷோ ♥
Comments
Post a Comment