Google

மெய் ஞானம் பெற்ற மனிதர் - Osho




மெய் ஞானம் பெற்ற ஒரு மனிதர் தனது
மனதிற்கு வெளியே நின்று ..

அவருடைய மனதை
கவனித்துப் பார்க்கிறார் ...

முழு மனமும் வேலை செய்யும் போது
நீங்கள் அதற்கு ..

வெளியில் இருந்தால் நீங்கள்தான்
மனதிற்கு எஜமான் ..

எதையும் நுணுக்கமாக கவனிக்கும் போது
மெய்ஞான அனுபவம் கிடைக்கிறது ..

உங்கள் கோபத்தை நீங்கள் நுணுக்கமாக
கவனிக்கும் போது ..

உங்கள் கோபம் மறைவதைக்
காணலாம் ...

தவறான செயல்கள் உங்களுடைய
விழிப்புணர்வின் முன் நிற்க முடியாது ..

மெய்ஞானம் பெற்ற மனிதர் தனது
தன்னுணர்வுக்குள் போய் விடுகிறார் ..

உங்கள் உடல் அழியக் கூடியது
உங்கள் மூளையும் அழியக் கூடியது ..

உங்கள் மனமும் இல்லாமல்
போய் விடும் ..

ஆனால் உங்களது தன்னுணர்வை
அழிக்க முடியாது ..

எண்ணங்களுக்கு என்று தனியாக
சக்தி கிடையாது ..

நீங்கள் அவற்றோடு ஐக்கியமாவதால் தான்
அவைகளுக்கு சக்தி கிடைக்கிறது ..

கோபத்தோடு நீங்கள் ஐக்கியம் ஆகவில்லை எனில்
உங்களால் அந்த கோபத்தையும் பார்க்க முடியும் ..

கொஞ்சம் கொஞ்ச மாக நீங்கள் உங்களது மனதில்
இருந்து வெளியே வர ஆரம்பியுங்கள் ...

அதுதான் கவனித்தல் மற்றும் சாட்சியாக
இருத்தல் என்பதாகும் ..

அப்போது நீங்கள் உங்களது எண்ணங்களோடு
ஐக்கியமாக மாட்டீர்கள் ..

அவை வேறு யாருடைய எண்ணங்களோ என்பது
போன்று பாராமுகமாக இருப்பீர்கள் ..

அப்போது தான் உங்களால் அவைகளை
கவனிக்க முடியும் ..

எண்ணங்களை கவனிப்பதற்கு என்று
குறிப்பிட்ட தூரம் தேவை ..

எண்ணங்களுக்கு நெருக்கமாக இருந்தால்
உங்களால் அவற்றை கவனிக்க முடியாது ..

ஆகவே கோபம் பேராசை போன்ற எண்ணங்களுக்கு
கொஞ்சம் தூரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் ..

நீங்கள் எந்த அளவுக்கு கவனிக்கின்றீர்களோ அந்த
அளவுக்கு தூரம் அதிகமாகும் ..

இடைவெளி அதிகம் ஆகும் போது உங்கள் எண்ணங்கள்
குறைந்த சக்தியாகி விடும் ..

விரைவில் அவை மறைந்து
போய் விடும் ..

இப்படிப் பட்ட தருணங்களில் தான் நீங்கள் மனமற்ற நிலையின்
முதல் காட்சியை பெறுவீர்கள் ..

ஓஷோ
மெய்ஞானம் ..

Comments