1962 ல் ஓஷோவின் கடிதம்...
1962 ல் ஓஷோவின் கடிதம்...
அன்பே,
🌸உனது மடல் பெற்றேன்...
ஏதாவது எழுதச் சொல்லி...
எவ்வளவு பாசத்தோடு
வற்புறுத்தியிறுக்கிறாய்...
ஆனால் நானோ,
இங்கே, ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கிக்
கிடக்கிறேன்...
🌸"நான் பேசுகிறேன்...
நான் பணியாற்றுகிறேன்...
ஆனால், என் அடியாழத்தில்
வெறுமைதான்...
அங்கே, அங்கே...
எந்தச் சலனமும் இல்லை.
🌸இவ்வாறு,
ஒரே சமயத்தில், இரட்டை வாழ்வு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என்ன நாடகம் இது !
ஆனால்,
இந்த வாழ்க்கை முழுவதுமே...
ஒரு நாடகம் தானே?
🌸இந்த விழிப்புணர்ச்சிதான்...
"ஓர் அபூர்வ சுதந்திரத்திற்கான
கதவைத் திறக்கிறது..."
🌻"அதுதான் செயலில்...
செயலின்மை."
இயக்கத்தில் அசையாமை...
மாற்றத்தில் நிரந்தரம்...
--அதுதான் உண்மை.
அதுதான் இருத்தல்.
🌻உண்மையான வாழ்வு...
இந்த நிரந்திரத்தில்தான்
இருக்கிறது...
எல்லாமே கனவுகளின் நீரோடை...
🌸உண்மையில்,
இந்த உலகம் ஒரு வெறும் கனவு...
இந்தக் கனவிலிருந்து...
விழித்துக் கொள்வதா? வேண்டாமா?
என்பதுதான் நம் பிரச்சனை...
🌸இது பற்றி நாம் விழிப்புடன்
இருக்க வேண்டும்...
இந்த விழிப்புணர்ச்சியால்
எல்லாமே மாறிவிடும்...
மையத்தில் இயக்கம்...
ஒரு பரிமாற்றம் ஏற்பட்டுவிடுகிறது...
உடலிலிருந்து ஆன்மாவுக்கு.
அப்புறம் அங்கே என்ன இருக்கும்?
🌸அதைச் சொல்ல இயலாது.
அதைச் சொல்லவே இயலாது.
எப்போதும், எப்போதுமே முடியாது !!
"அதை அவரவரே உணர்வதைத் தவிர
வேறு வழியேயில்லை...
மரணத்தை, மரணத்தின்
மூலமாகத்தானே அறியமுடியும்?
🌸சத்தியத்தை, ஒருவர் தனக்குள் ஆழ்ந்து மூழ்குவதன் மூலமே உணர முடியும்.
🌸"கடவுள் உன்னை சத்திய
வெள்ளத்தில் மூழ்கடிப்பாராக !!!"
🌿ஓஷோ🌿
Comments
Post a Comment