Google

" கலங்கிய மனம் எப்படி நெறியைத் தெரிந்து கொள்ள முடியும் -Osho



" கலங்கிய மனம் எப்படி நெறியைத் தெரிந்து கொள்ள முடியும் "

கருத்துக்களை தாண்டிய மனம் கவனிக்கிறது
புரிந்து கொள்கிறது

தத்துவம் என்பது வெறும் யூகம்தான்

சத்தியத்தை யாரும் உருவாக்க முடியாது

அதை கண்டு பிடிக்கத் தான் முடியும்

லாவோட் சூ சொல்கிறார்
சொல்லி விட முடியும் என்றால் அது சத்தியமே அல்ல

சத்தியத்தை அனுபவித்து மட்டுமே உணர முடியும்

அது விளக்கி சொல்லி புரிய வைக்க முடியாத அனுபவம்

மனதால் கடந்த காலத்தை மட்டுமே நினைவுக்கு கொண்டு வர முடியும்

இறைவனை அனுபவிக்க முடியும்
விளக்கிச் சொல்ல முடியாது

விளக்க முடியாத இறைவனை விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள் மதத் தலைவர்கள்

ஆழ் மனதில் ஏதாவது எண்ணம் வேர் கொள்ளுமானால் அதற்கு எதார்த்தத்தில் ஒரு வடிவம் கொடுக்கத் தான் முனைப்பு இருக்கும்

நீங்கள் சத்தியத்தைக் காண வேண்டுமானால் எந்த எண்ணத்தையும் தூக்கிக் கொண்டு போகக் கூடாது

ஆச்சரியத்தில் வாய் பிளப்பவனே குழந்தையாக இருக்க முடியும்
அவனே திருவருள் பெற்றவன்

கள்ளம் கபடமற்ற நிலையில் தான்
எது இருக்கிறதோ அதை தெரிந்து கொள்ள முடியும்

புத்தர் கூறுகிறார்
பொறு தியானி முதலில் உன் கலங்கிய மனம் தெளிவு அடையட்டும்

உன் மனம் தெளிவு அடைந்து விட்டால்
நீயாக உனக்கான வழியைக் காண முடியும்

ஓஷோ
தம்ம பதம் II
வெகுளித் தனத்தின்
ஞானம்

Comments