Google

யார் என்னுடைய உண்மையான நண்பன்? - Osho



என்னுடைய கேள்வி என்னவென்றால் யார் என்னுடைய உண்மையான நண்பன்?

இந்த கேள்வி எப்போதும் என்னுள் எழுந்து கொண்டே இருக்கிறது.

இதைப் பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?

ஓஷோ  பதில்
****************

நீ தவறான திசையிலிருந்து இக்கேள்வியை கேட்கின்றாய்.

 ”யார் உண்மையான நண்பன்”? என்று எப்பொழுதும் கேட்காதே.

“ நான் யாருக்காவது உண்மையான நண்பனாக இருக்கிறேனா?” என்று கேள்.

 இது தான் சரியான கேள்வி.

 அவர்கள் உனக்கு நண்பனாக இருக்கிறார்களா இல்லையா என்று நீ ஏன் மற்றவரைப் பற்றி கவலைப் படுகிறாய்?

இக்கட்டான நிலையில் உண்மையான நண்பனை கண்டுகொள்ளலாம் (A friend in need is a friend indeed) என்ற பழமொழி ஒன்று உள்ளது.

ஆழமாக பார்த்தால் அது பேராசை!

அது நட்பல்ல, அது அன்பல்ல.

 மற்றவர்களை ஒரு மட்டமாக பயன்படுத்திக் கொள்ளும் விழைவு.

 எவரும் காரியத்திற்கானவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் தன்னளவில் இறுதியானவர்கள். நீ ஏன் உனக்கு உண்மையான நண்பன் யார் என கவலை கொள்கிறாய்?

உண்மையான கேள்வி ”நான் மற்றவர்களிடம் நட்பாக உள்ளேனா?” என்று இருக்க வேண்டும். நட்பு என்பது என்ன என்று தெரியுமா? காதலில் உயர்ந்த நிலை தான் நட்பு. காதலில் காமம் உள்ளார்ந்து இருக்கும். நட்பு எல்லா ஆசைகளும் மறையும் இடம். நட்பு நுட்பமாக முழுமையானது. இது எவ்வாறு மற்றவர்களை உபயோகத்திக் கொள்ளுவது என்ற கேள்வி அல்ல. இது நமக்கு மற்றவர்களின் தேவை என்பதும் அல்ல. இது எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதே.

நீ அதிகமாக பெற்றிருக்கிறாய் அதை பகிர்ந்து கொள்ள விழைகிறாய். யாரெல்லாம் உன் சந்தோசத்தை உன் நடனத்தை, உன் பாடலை பகிர்ந்து கொள்வதற்கு தயாராக இருக்கிறார்களோ அவர்களிடம் நீ கடமைப்பட்ட உணர்வை பெறுவாய். நீ அவனுக்கோ/அவளுக்கோ வழங்கியதால் அவர்கள் உனக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருக்க வேண்டியவர்கள் அல்ல. ஒரு நண்பன் இவ்வகையில் சிந்திப்பதில்லை. தான் பெற்றதை, அடைந்ததை, தன்னிடம் உள்ளதை, தன்னை, மற்றவர்களுக்கு வழங்க உதவியதால் ஒரு நண்பன் எப்போதும் மற்றவர்களிடம் நன்றி உணர்ச்சியால் திளைப்பான்.

காதல் என்பது பேராசை. ஆங்கில வார்த்தை LOVE, சமஸ்கிருத வார்த்தை “லோப்” என்பதிலிருந்து வந்த்து என்று தெரியவந்தால் நீ ஆச்சரியப்படுவாய். லோப் என்றால் பேராசை. பேராசை - காதல் ஆனது வினோதமான கதை. சமஸ்கிருத்த்தில் இது பேராசை. உண்மையான வேர்ச்சொல் அர்த்தம் பேராசை. நாம் இப்போது தெரிந்து வைத்திருக்கும் காதல் என்பது உள்ளார்ந்த அர்த்த்த்தில் கண்டால் பேராசையே.

மற்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள நட்பு கொள்வது என்பது அடிப்படையிலேயே தவறானது. நட்பு பகிர்ந்து கொள்ளவேண்டும். நீ எதாவது வைத்திருந்தால் பகிர்ந்து கொள். அதற்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் நண்பர்கள். நட்பு என்பது “தேவை” சார்ந்த்தல்ல. ஆபத்தில் இருக்கும்போது நண்பன் என்பவன் வந்து உதவ வேண்டும் என்பதல்ல. அது பொருத்தமற்றது. அவன் வரலாம் வராமலும் போகலாம். அவன் வரவில்லை என்றால் நீ குறை கூறமாட்டாய். அவன் வந்தால் நல்லதே. அவன் வரவில்லை என்றாலும் முற்றிலும் சரியே. வருவதும் வராத்தும் அது அவனுடைய முடிவு. நீ அவனை கையாள போவதில்லை. நீ அவனை குற்ற உணர்வுக்கு ஆளாக்க மாட்டாய். நீ எந்த காழ்புணர்ச்சியும் கொள்ளமாட்டாய். ”எனக்கு தேவையானபோது நீ வரவில்லை என்ன மாதிரியான நண்பன் நீ” என்று கூறமாட்டாய்.

உன்னைப் பற்றி கேள்வி கேள். மற்றவர்களைப் பற்றி கேள்வி கேட்காதே. மற்றவர்களை பற்றி உறுதியாக எதையும் சொல்ல முடியாது அவசியமும் இல்லை. மற்றவர்களைப் பற்றி எவ்வாறு நீ உறுதி கொள்ள முடியும்? இக்கணம் ஒருவன் உன்னை நேசிக்கலாம் மறுகணம் உன்னை நேசிக்காமல் போகலாம். எந்த உத்திரவாதமும் இல்லை. நீ உன்னைப் பற்றி மட்டுமே உறுதி கொள்ள முடியும் அதுவும் சிறிய கணத்தில் மட்டுமே. ஒட்டுமொத்த முழு எதிர்காலத்தைப் பற்றி நினைக்க தேவையில்லை.

இக்கணத்தில் வாழ். இக்கணத்தில் முழுமையாக நட்பு உணர்வோடு மணம் வீசிக் கொண்டிருந்தால் அடுத்த கணத்தை பற்றி ஏன் கவலை கொள்கிறாய்? அடுத்த கணம் இக்கணத்தில் இருந்தே பிறக்க விருக்கிறது. இக்கணம் மிக உயர்ந்த ஆழமான தரத்தில் இருக்கட்டும். அதுவே அடுத்த உயர்ந்த தரத்திலான தளத்தை ஏற்படுத்தும். அதைப் பற்றி கவலை கொள்ளாதே இக்கணத்தில் ஆழமான நட்புணர்வுடன் வாழ் போதும்.

-- ஓஷோ --

Comments