Google

கடவுளுக்கு தெரிந்த ஒரே மொழி உணர்வுதான் - Osho



🎶 கடவுளுக்கு தெரிந்த ஒரே மொழி உணர்வுதான்

ஒருவருடைய வார்த்தைகளில் ஒலிகளை மட்டும் கேட்கும்போது

அவருடைய உணர்வைப் புரிந்து கொள்ளலாம்

அர்த்தமில்லாத ஓம் என்ற ஒலி நமக்குள்ளே ஆழ்ந்த அமைதியைக் கொடுக்கிறது

இறப்பு என்பது சாதாரண மக்களுக்கு துன்பத்தின் உச்சம்

அதுவே ஞானிகளுக்கு இன்பத்தின் உச்சம்

இறப்பை தைரியமாக எதிர் கொள்ளும் ஒருவனால்

பிரபஞ்ச பெரிய மனதோடு ஒன்று கலக்க முடியும்

இலக்கு என்பது அகங்காரத் தன்மை உடையது

புத்தாத் தன்மை என்பது அகங்காரம் அற்றது

எல்லாமே மாறிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் மாறாத உண்மை

நாம் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கிறோம்

நமது அமைதியான நிலையான இருத்தலில் தான் உண்மையான செயல் பிறக்கும்

கணத்துக்குக் கணம் ஒவ்வொன்றும் வெறுமையில் இருந்துதான் உருவாகி வெளியே வருகிறது

வெறுமை நிலை என்றால் எல்லாம் உடையது என்று அர்த்தம்

கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்றால்

அவர் எங்குமே குறிப்பிட்டு இருக்க வில்லை என்பதாகும்

இந்தக் கடவுள் தன்மை தான் அந்த வெறுமை நிலை

இதை பிரபஞ்ச வெறுமை
(cosmic nothingness) என்று அழைக்கலாம்

நாம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள மிகச் சுலபமான வழி

நம்மை நாமே அறிந்து கொள்வது தான் 🎶

🎵 ஓஷோ 🎵

Comments