Google

மனநிலை நிர்வாகம். பகுதி-5- துயரத்தின் டாய்-சீ சக்தி - OSHO



6.5.ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 6- மனநிலை நிர்வாகம்.

பகுதி-5- துயரத்தின் டாய்-சீ சக்தி.
.
நீங்கள் துயரத்திலிருக்கிறீர்கள் என்று தோன்றும் போதெல்லாம், மெதுவாக அதற்குள் செல்லுங்கள்., வேகமாக செல்லாதீர்கள்; அசைவுகளை மெதுவாக செய்யுங்கள். டாய்-சீ அசைவுகள்.
.
நீங்கள் சோகமாக உணரும்போது, பிறகு உங்கள் கண்களை மூடுங்கள். படம் மெதுவாக நகரட்டும். என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள்.  மெது மெதுவாக அதனுள் நகருங்கள், சுற்றிலுமுள்ள பார்க்கக்கூடிய அனைத்தையும் கவனித்தபடி, பார்த்து, என்ன நடக்கிறது என்பதை கவனித்தபடி, மெதுவாக செல்லுங்கள். ஒவ்வொரு நிகழ்வையும் தனியாக, ஒவ்வொரு இழையையும் தனியாக, பார்க்கும் வண்ணம் நகருங்கள். உங்களுக்கு கோபம் வந்தால் – அதற்குள் மெதுவாக நுழையுங்கள்.
.
சில நாட்கள் அசைவுகள் மெதுவாக இருக்கட்டும், மற்ற விஷயங்களையும் மெதுவாக செய்யலாம். உதாரணமாக, நீங்கள் நடந்தால், இப்போது நடப்பதைவிட மெதுவாக நடந்து செல்லுங்கள். சாப்பிட்டால், மெதுவாக உண்ணுங்கள், அதிகமாக மெல்லுங்கள்.  உங்களுக்கு வழக்கமாக இருபது நிமிடங்கள் பிடித்தால், முப்பது நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். 50 சதவீதம் குறையுங்கள். நீங்கள் உங்கள் கண்களை வேகமாக திறப்பீர்கள் என்றால், அதை மெதுவாக்குங்கள்.  குளியலுக்கு கூட வழக்கத்தை விட இரட்டிப்பு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் நிதானப்படுத்துங்கள்.
.
நீங்கள் எல்லாவற்றையும் நிதானபடுத்தினால், தானாகவே உங்கள் எல்லா இயல்புகளுமே மெதுவாகும்.  இயந்திரத்தனம் என்பது ஒன்றேதான் – அதே இயந்திரத்தனத்தில்தான் நீங்கள் நடக்கிறீர்கள், அதே இயந்திரத்தனத்தில்தான் நீங்கள் பேசுகிறீர்கள். அதே இயந்திரத்தனத்தில்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள். வேறு வேறு விதமான இயந்திரத்தனமில்லை. ஒரே ஒருவிதமான இயந்திரத்தனம்தான். செயல்கள் எல்லாவற்றிற்கும் ஒரே முறைதான். அதனால், நீங்கள் எல்லாவற்றையும் மெதுவாக்கினால், நீங்கள் வியந்து போவீர்கள்: உங்கள் சோகம், உங்கள் துயரம், உங்கள் கோபம், உங்கள் வன்முறை – எல்லாமே மெதுவாகும்.
அது ஒரு அசாத்தியமான அனுபவத்தை உருவாக்கும்: உங்கள் சிந்தனைகள் மெதுவாகும், உங்கள் ஆசைகள் மெதுவாகும்,  உங்கள் பழைய பழக்கங்கள் மெதுவாகும்.
.
உதாரணமாக, நீங்கள் புகைபிடித்தால், உங்கள் கைகள் மெதுவாக நகரும்….  சட்டைபைக்குள் சென்று – சிகரெட்டை வெளியே எடுக்கும் …  சிகரெட்டை வாய்க்குள் போடும். வத்திப்பெட்டியை வெளியே எடுக்கும், ஒரு சிகரெட்டிற்கு அரைமணிநேரம்பிடிக்கும் அளவு நீங்கள் அவ்வளவு மெதுவாக செய்வீர்கள்! நீங்கள் வியந்து போவீர்கள், நீங்கள் எப்படி காரியம் செய்கிறீர்கள் என்பதை உங்களால் பார்க்கமுடியும்.
.
நிலவு நாட்குறிப்பு
.
நிலவு சில சமயங்களில் ஒருவர்மீது அதிகபாதிப்பை ஏற்படுத்தமுடியும், அதனால் அதைகவனியுங்கள், பயன்படுத்துங்கள். குறைந்தபட்சம் இரண்டுமாதங்களுக்கு தினமும் அதை பதிவு செய்யுங்கள், ஒரு அமாவாசை நாளில் அந்த முழு நாளும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்; பிறகு அடுத்தநாள், மூன்றாவதுநாள், பிறகு நான்கு, இப்படி ஒவ்வொருநாளும் முழுநிலவுநாள் வரை குறித்து வையுங்கள். அந்தநிலவு மறையத் துவங்கும்போது, அதையும் பதிவுசெய்யுங்கள். உங்களால் அதில் ஒரு லயத்தை பார்க்க முடியும் – உங்கள் மனநிலை நிலவுக்கேற்றபடி நகரும்.
.
அந்த பட்டியல் உங்களுக்கு சரியாக தெரியவரும் போது, அந்த பட்டியலை வைத்துக்கொண்டு நீங்கள் பல காரியங்களைச் செய்யமுடியும். நாளை என்ன நடக்கப்போகிறது என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியவரும், நீங்கள் அதற்கு தயாராக இருக்கமுடியும்.  ஒரு சோகம் வரப்போகிறதென்றால், பிறகு சோகத்தை ரசியுங்கள். பிறகு அதனுடன் சண்டைபோட வேண்டிய அவசியமில்லை. அதனுடன் சண்டைபோடுவதைவிட, அதை பயன்படுத்துங்கள், ஏனெனில் சோகத்தைக்கூட பயன்படுத்த முடியும்.

.
-தொடரும்.
-OSHO_Tamil

Comments