மக்களுக்கு முழுமையாக விழிப்பில்லை -OSHO
மக்களுக்கு முழுமையாக விழிப்பில்லை. அவர்கள் எதையாவது, எதையும் படித்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள். எதையாவது, முட்டாள்தனத்தை. அவர்கள் வானொலி கேட்கிறார்கள், அவர்கள் அரட்டை அடிக்கிறார்கள். மக்களோடு வம்பு பேசுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஏதாவது குப்பைகளைப் பரஸ்பரம் தலையில் திணித்துக்கொள்கிறார்கள். அவர்களிடம் குப்பைகள்தானிருக்கின்றன.
உங்கள் மீது தேவையில்லாது குப்பைகளைப் போட்டு உங்களை பாரப்படுத்துகிற சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடுங்கள். ஏற்கனவே உங்களிடம் அது அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது. நீங்கள் ஏதோ விலை மதிப்பற்றதை போல சேர்த்துக்கொண்டே போகிறீர்கள். "குறைவாகப் பேசுங்கள், அவசியமானதை மட்டும் கேளுங்கள். பேசுவது, கவனிப்பது இரண்டிலும் தந்தி பாணியில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் குறைவாகப் பேசினால், நீங்கள் குறைவாகக் கேட்டால், மெல்ல, மெல்ல நீங்கள் ஒரு சுத்தத்தை, ஒரு தூய்மையை, ஏதோ நீங்கள் குளித்துவிட்டு வந்ததைப் போல, உங்களுக்குள் ஒன்று எழும். அதுதான் தியானம் எழுவதற்கான தேவையான உரம். கண்ட குப்பைகளையும் படித்துக்கொண்டே போகாதீர்கள்.
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment