புகை பிடித்தலை தியானமாக மாற்றி அதிலிருந்து விடுபட முடியுமா? ஓஷோ சொல்வதைக் கேளுங்கள்
புகை பிடித்தலை தியானமாக மாற்றி அதிலிருந்து விடுபட முடியுமா? ஓஷோ சொல்வதைக் கேளுங்கள்:
"ஜென் மக்கள் ஒரு தேநீர் குடிப்பதையே தியானமாக மாற்றி அதை விழாவாக்கும்போது, ஏன் கூடாது? புகை பிடித்தல் கூட ஓர் அழகான தியானமாக முடியும்".
" ஒன்று செய்யுங்கள். நீங்கள் உங்கள் பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுக்கும்போது மெதுவாக எடுங்கள், மெதுவாக நகர்த்துங்கள். அதை ரசியுங்கள். அவசரமே இல்லை. உணர்வோடு இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள். விழிப்போடு, மெதுவாக அதை வெளியே எடுங்கள். முழு விழிப்போடு. பிறகு சிகரெட்டை பையிலிருந்து முழு விழிப்போடு எடுங்கள், மெதுவாக, பழைய மாதிரி அவசரமாக, ஒரு மயக்கமான, இயந்திரமான நிலையில் அல்ல. பிறகு அந்த சிகரெட்டை அந்தப் பெட்டியில் தட்டுங்கள். ஆனால் எச்சரிக்கையோடு, அதன் சத்தத்தைக் கேளுங்கள். எப்படி ஜென் மக்கள் அவர்களின் பிரார்த்தனையைத் துவங்குமுன், தேநீர் கொதிக்கத் துவங்கும்போது செய்கிற மாதிரி. அந்த நறுமணத்தில். பிறகு சிகரெட்டின் வாசனை அதன் அழகை........"
"ஆமாம், அது அழகாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் போல புகையிலையும் தெய்வீகத்தன்மை கொண்டதுதான். நுகர்ந்து பாருங்கள். அது கடவுளின் வாசனை".
"பிறகு அதை உங்கள் வாயில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முழு விழிப்போடு, அதை முழு விழிப்போடு பற்ற வையுங்கள். அதன் ஒவ்வொரு செயலையும் அனுபவியுங்கள். ஒவ்வொரு சின்ன செயலையும், பிறகு அதை சாத்தியப்படுகிற வரையில் அதை பல சின்ன செயல்களாக மாற்றுங்கள். அதனால் நீங்கள் இன்னும், இன்னும் விழிப்போடு இருப்பீர்கள்."
"பிறகு முதல் முறை ஊதுங்கள். புகை வடிவத்தில் கடவுள். இந்துக்கள் சொல்வார்கள், "அன்னம் பிரம்மா" உணவுதான் கடவுள். ஏன் புகை இருக்கக்கூடாது? எல்லாமே கடவுள். உங்கள் நுரையீரலை ஆழமாக நிரப்புங்கள். அது பிராணாயாமம். நான் புது யகத்திற்கான புதிய யோகா சொல்லித் தருகிறேன். பிறகு புகையை வெளியே விடுங்கள். ஓய்வாக, பிறகு இன்னொரு உறிஞ்சல், மெதுவாக செல்லுங்கள்.
இதை நீங்கள் செய்ய முடிந்தால், நீங்கள் வியந்து போவீர்கள். விரைவில் அப்படி செய்வதன் முட்டாள்தனத்தை நீங்கள் உணர்வீர்கள். மற்றவர்கள் அதை முட்டாள்தனம் என்று சொன்னதனால் அல்ல. மற்றவர்கள் அது தீயது என்று சொன்னதனால் அல்ல. நீங்களே பார்ப்பீர்கள், அப்படி பார்ப்பது அறிவுஜீவித்தனமாக இருக்காது. அது உங்கள் மொத்த இருத்தலிலிருந்து இருக்கும். அது உங்கள் மொத்தத்தின் பார்வையாக இருக்கும். பிறகு ஒரு நாள், அது நின்றால், நிற்கும்; தொடர்ந்தால், தொடரும், அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
"இதை மற்ற விஷயங்களிலும் முயற்சி செய்யுங்கள்.".
இதுதான் தானியங்கி மாற்று ரகசியம். நடங்கள், மெதுவாக நடங்கள், கவனிப்போடு, பார்ப்பது, கவனத்தோடு பார்ப்பது, நீங்கள் மரங்கள் எப்போதுமில்லாத புது பசுமையோடு இருப்பதைக் காண்பீர்கள். ரோஜாக்கள் இன்னும் எப்போதுமில்லாததை விட. கவனியுங்கள். யாரோ பேசுகிறார்கள், கிசுகிசுக்கிறார்கள். கவனியுங்கள், கவனியுங்கள். கவனமாக. நீங்கள் பேசும்போது, கவனமாக பேசுங்கள். உங்கள் முழு விழிப்பும் பிறகு அது தன்னியக்கத்திலிருந்து மாறிவிடும்.
-OSHO_Tamil
Comments
Post a Comment