Google

விழிப்புணர்வு ஓஷோவின் சிந்தனைத் துளி - OSHO



விழிப்புணர்வு
ஓஷோவின்
சிந்தனைத் துளி,,

விழிப்புணர்வு பெற்ற மனிதனுக்கு வலி ஏற்படுத்த உங்களால் முடியாது.

நீங்கள் அவருடைய அவையங்களை வெட்டலாம், அவரை நெருப்பில் போடலாம் கொலையும் செய்யலாம்.

ஆனால் அவரை துன்புறுத்தி விடமுடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கணமும் அவர் தனக்கு ஏற்படும் நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்கிறார்.

எனவே விழிப்பு நிலையில் இப்போதே காரியத்தில் இறங்குங்கள். வேகமாக நடந்து செல்லும்போது நீங்கள் நடக்கவில்லை.

உங்கள் உடல்தான் நடந்து செல்கிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். நீங்கள் ஒருபோதும் நடப்பதே இல்லை. எப்படி நடக்க இயலும்??

உயிருக்கு நடப்பதற்குக் கால்கள் கிடையாது. பசியை உணர வயிறு கிடையாது. உயிருக்கு ஆசைகள் கிடையாது.
ஆசைகள் எல்லாம் உடல் சம்பந்தப்பட்டவை.

உயிர் விருப்பு வெறுப்பற்றது. எனவே அதனால் நடந்து செல்ல இயலாது. உடல் மட்டுமே நடக்கும் திறமை பெற்றிருக்கிறது.

இந்த விழிப்புணர்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கவனத்தில் வைத்திருங்கள்.

மெதுவாக உங்களுக்கு ஒரு விந்தையான சிலிர்ப்பூட்டும் ஒரு அனுவம் ஏற்படும்.

சாலையில் நடந்து செல்லும் சமயத்தில் நீங்கள் நடக்கவில்லை, உங்கள் உடல் தான் நடந்து செல்கிறது என்று ஒருநாள் திடீரென்று உணரத் தொடங்குவீர்கள்.

நீங்கள் இரண்டு கூறுகளாகப் பிரிந்து போவீர்கள்.

ஒன்று நடந்து போகிறது. மற்றொன்று அந்த செயலுடன் சம்பந்தப்படாமல் இருக்கிறது என்பதை உணர்விர்கள்.

உடலின் ஒரு பகுதி உணவு உண்கிறது. மற்றொரு பகுதி உண்பதில்லை.

ஓஷோ
சிவசூத்திரம்,,,
-OSHO_Tamil

Comments

Post a Comment