நிர்வாண நிலை - OSHO
நிர்வாண நிலை
--------------------------------
ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டு, தன்னை ஒரு பூனை என்று எண்ண ஆரம்பித்தான்.தான் ஒரு பூனை என்று கூறி பூனையைப் போலே செயல்பட ஆரம்பித்தான். பாத்திரத்தில் உள்ள பாலை,நக்கி நக்கிச் சாப்பிட ஆரம்பித்தான்.
மனோ தத்துவ மருத்துவர் அவனைப் பரிசோதித்து அவனுக்கு சிகிச்சை அளித்தார்.அவருடைய சிகிச்சையில் முன்னேற்றம் தெரிந்தது.
மருத்துவருக்கு அவனுடைய வீட்டார் போன் செய்து நன்றி தெரிவித்தார்கள்.
மருத்துவர் அந்த நோயாலியிடம் போனை கொடுக்கச் சொல்லி பேசினார்.
அவனும் போனைவாங்கி,தான் சரியாகி விட்டதாகவும், தன்னை மனிதன் என்று புரிந்து விட்டதாகவும், மனிதர்களைப் போல் நடப்பதாகவும் கூறினான்.ஆனா வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்ற ஒரே ஒரு குறையை மற்றும் கூறினான்.
ஏன் வெளியே போகமுடியவில்லை?என்று மருத்துவர் கேட்டார்.
நான் பூனையல்ல, மனிதன் தான் என்பது எனக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது.ஆனால் வீட்டுக்கு வெளியே தெருவெல்லாம் நிறைய நாய்கள் இருக்கின்றன.அவைகளேல்லாம் நான் பூனையல்ல என்பது புரிந்து விட்டதா இல்லையா என்பது தான் எனக்கு தெரியவில்லை டாக்டர்! என்று அவன் பதில் கூறினான்.
நமது வெளி மனதுக்கு வெளி மனதின் பாஷை மட்டுமே தெறியும்.வெளி மனதின் அம்சமாகவே அது துரியத்தையும் தேடிவிடுகிறது. நிர்வாண நிலையையும்
தேடி விடுகிறது.
நிர்வாண நிலையைத் தேடுவதால், நிர்வான நிலை கிடைப்பதில்லை. அதைத் தேடிக்கொண்டு தவிக்கும் மனது தான் இன்னும் கொஞ்சம் சிக்கல் மிகுந்ததாகி விடுகிறது.
ஆனால் நாம் வந்து சேர வேண்டிய இடம் இந்தத் துரிய நிலையே.
--OSHO--
-OSHO_TAMIL
Comments
Post a Comment