Google

தியானம் குறித்து ஓஷோவின் Lovely விளக்கம்



தியானம்
குறித்து
ஓஷோவின்
Lovely
விளக்கம்,,,

தியானத்தில் உட்காரும் போது ஒர் எண்ணம் உதிக்கிறது.
 உடனே நம்மை மறந்து விடுகிறோம்.எண்ணத்தில் ஈடுபட்டு அதைப் பின் தொடர்கிறோம்.
கவனம் சிதறிப் போதலை வெல்ல வேண்டும் என்கிறது தந்த்ரா.
என்ன செய்ய வேண்டும்?

எண்ணம் உதிக்கும் போது அதை விட்டு விலகிச் சாட்சி மாத்திரமாய் நின்று கவனிக்க வேண்டும். அது வந்து போதலை விலகி நின்று கவனியுங்கள்.

அதோடு சேர்ந்து விடாதீர்கள்.அது ஒரு மோசமான எண்ணமாகவும் இருக்கலாம்.ஆனால் அது மோசமான எண்ணம் என்று ஒதுக்கி விச வேண்டாம். அதைப் பற்றி எண்ண ஆரம்பித்தால் அதோடு ஒட்டிக் கொள்வோம். கவனம் சிதறிப் போகும்.

அந்த எண்ணம் இன்னொரு எண்ணெத்திற்க்கு அழைத்துச் செல்லும்.
ஒரு நல்ல எண்ணம் உதிக்கும்.கருணை மிக்க அந்த எண்ணத்தைப் பற்றி வியப்பு உண்டாகும். நல்லதொ கெட்டதோ, எண்ணத்தோடு சேராமல் சாட்சியாக பார்த்துக் கொண்டிருங்கள்.ஆனால், தொடக்கத்தில் பலமுறை கவனம் சிதறலாம். பரவாயில்லை, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

கவலைப்பட்டால் அதுவே ஒரு பெரிய தடையாகிவிடும்.    கவனம் சிதறும் போது, 'என் கவனம் சிதறிவிட்டது' என்று நினைவு மட்டும் இருக்கட்டும்.
மனம் நோக வேண்டாம். 'இது மோசமான எண்ணம், என் கவனம் சிதறிவிட்டது' என்று நினைத்தால்' நாமே இரட்டையை உருவாக்கி விடுகிறோம்.
 நல்லது-கெட்டது, சரி - ஒப்புக் கொள்ளுங்கள்.

 மறுபடியும் திரும்பி வாருங்கள்.கவனம் சிதறுவதால் கூட முரண்பாடு உருவாகாது.கவனக் குறைவா?
அந்த எண்ணம் ஏற்பட்டதும் திரும்பி வாருங்கள். முரண்பாட்டை உருவாக்காதீர்கள்.

இது நல்லது, அது கெட்டது என்று கூறாதீர்கள்.

வருந்தவும் வேண்டாம். அதையும் மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்.
அவ்வளவே !
கவன் குறைவை அனுபவிக்க ஆரம்பித்ததுமே, அது படிப் படியாகக் குறைந்து விடும். பிறகு தான் கவனச் சிதறலே ஏற்படாது.

ஆனால் இது வெற்றியன்று. கவனச் சிதறலை நாம் மனதின் ஆழ்மனதில் தள்ளவில்லை.அதையும் அனுமதிக்கிறோம்.

அதுவும் நல்லதே.

ஆக, எல்லாமே நல்லது, புனிதமானது என்பதே தந்த்ராக் கோட்பாடு.

---ஓஷோ

தந்த்ரா

ஒரு உன்னத ஞானம்
Osho_Tamil

Comments