உண்மையான விடுதலை என்பது என்ன? - OSHO
உண்மையான விடுதலை என்பது என்ன என்று நீங்கள் அறிய விரும்பினால்,
உங்களது இந்த 'நான்' என்பதன் பகுதிகளை விட்டு விட வேண்டும்.
நீங்கள் ஒரு ஆண்
நீங்கள் ஒரு பெண்
என்பதை மறந்து விட்டு
நீங்கள் வெறுமனே மனிதன் என்று நினைக்க வேண்டும்.
உங்களது பெயரையும் கூட மறந்து விட்டு
அதாவது அந்தப் பெயர் உங்களது
உண்மை நிலை அல்ல என்றும் அறிந்து கொண்டு, நீங்கள் கற்றவைகளை எல்லாம்
மறைந்துவிட்டு, அதாவது அவைகள் எல்லாம் உங்களது சொந்த அனுபவம் இல்லை என்றும், நீங்கள் சொந்தமாக அடைந்த விஷயம் இல்லை என்றும் அது மற்றவா்களிடம் இருந்து பெற்றது என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த உலகம் முழுவதும் வெளிச்சம் நிரம்பி இருக்கலாம். ஆனால், உங்களுக்குள் ஆழத்தில் நீங்கள் இருளில் தான் வாழ்கிறீீ்ீ்ீர்கள்.
நீங்கள் உங்களுக்குள் ஒரு சிறிய ஒளிச்சுடா் கூட இல்லாமல் இருக்கும் போது இந்த உலகம் முழுவதும் வெளிச்சம் இருந்து என்ன பயன்?
எனவே கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பிறந்த பிறகு உங்களிடம் எந்தெந்த விஷயங்களை சோ்க்கப்பட்டனவோ
அவையெல்லாம் உங்களது உண்மை நிலை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இப்படி உங்களது 'நான்' என்பதன் பகுதிகள் மறைந்துவிட்ட பின்னா்
நீங்கள் இந்த வெளி உலகில் உள்ள வானத்தைப் போன்று உங்களுக்குள்ளும்
ஒரு பிரமாண்டமான வானம் ஒன்று இருப்பதை அறிந்து கொள்வீா்கள்.
இது தான் உங்களது விழிப்பு நிலை
💐ஓஷோ💐
OSHO_Tamil

Comments
Post a Comment