J.K.சிந்தனை துளிகள்
J.K.சிந்தனை துளிகள்
பயம் இல்லாத ஒருவனிடம் வன்முறையோ ஆக்கிரமிப்பு எண்ணமோ இருக்க முடியாது. எந்த வடிவிலும் அச்சம் இல்லாதவன் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பான் .
மதம் சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த எந்த வகையாக இருந்தாலும் , கொள்கைகள் கோட்பாடுகள் போன்றவை முட்டாள்தனமானவை. இவை மனிதர்களை பிரிக்கின்றன.
ஒரு பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டுமானால், பிரச்சினைக்கான தீர்வை பெற வேண்டும் என்ற பதட்டம் நம்மிடம் இருக்க கூடாது.
அனைவரிடமுமே ஆதிக்க எண்ணமும், அதிகாரத்துக்கான ஆவலும் மறைந்து இருக்கின்றன. ஹிட்லரிடமும் , முசோலினியிடமும் இது வெளிப்படையாக தெரிகிறது. ஒவ்வொருவரிடமும் மறைந்து இருக்கும் இந்த வித்து அகற்றப்படாவிட்டால் , வெறுப்பு , யுத்தம் , பகைமை போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
உண்மையை அடைவதற்கு பாதை ஏதும் இல்லை. எந்த மதமோ , எந்த இயக்கமோ உண்மையை அடைய உங்களுக்கு உதவாது.
பிரச்சினையை சரியாக புரிந்து கொண்டு விட்டால் , தீர்வு அதில் இருந்தே கிடைத்து விடும். ஏனென்றால் பிரச்சினையும் , தீர்வும் வெவ்வேறு அல்ல.
உலகம் ஒவ்வொருவரிடமும் உறைந்துள்ளது. எப்படி கற்பது என தெரிந்து விட்டால், கதவுக்கான சாவி உங்கள் கையில் கிடைத்து விடும். உங்களை தவிர வேறு யாரும் அந்த சாவியை உங்களுக்கு தர முடியாது. கதவை உங்களுக்காக யாரும் திறந்து விட முடியாது.
ஒரு நம்பிக்கை மீண்டும் மீண்டும் உறுதி படுத்தி கொள்வது, உங்கள் மனதில் இருக்கும் அச்சத்தின் அடையாளம்.
நாம் அனைவருமே பிரபலமாக விரும்புகிறோம். ஏதோ ஒன்றை அடைய விரும்பும் அந்த கணமே நம் சுதந்திரத்தை இழந்து விடுகிறோம்.
- J.Krishnamurti

Comments
Post a Comment