மனம் - OSHO
மனம்:
உன்னைப் பற்றிக் கொண்டிருக்கவும்,கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் ஆயிரத்தொரு வழிகளில் முயன்று கொண்டே இருந்திருக்கிறாய்.
ஆனால் முடிந்ததே இல்லை.உன் மனம்தான் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறதே.!
மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் வரையிலும் அதைப் பற்றுவது முடியாத காரியம்.
மனம் அலைப்பின்றிக் கிடக்கும்போது இல்லாமல் போய்விடுகிறது.அதைப் பற்றிக் கொள்ள அதுதான் ஒரே வழி.
மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாது.
பார்க்கப்போனால் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறவர்கள் மனதைக் கழித்து விட்டவர்கள்தான்.
அவர்கள் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது தவறு.
மனம் இருக்கும் வரை அதைக் கட்டுப்படுத்தியவர்கள் யாருமில்லை.
கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் முடியாது.
மனம் இருக்கும் வரை அதுதான் உன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும்.
மனம் கழிந்து போகும்போதுதான் அதைக் கட்டுப்படுத்த முடியும்.
அலைப்பின்றிக் கிடக்கும்போது மனம் இல்லாமல் போய்விடுகிறது.
எனவே அலைப்பற்ற மனம் வேண்டும் என்று சொல்லும்போது மௌனித்த மனம்,நிம்மதியான மனம் என்று பிறர் சொல்லும் போது தாங்கள் என்ன சொல்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை.
அலைந்து கொண்டிருக்கும் போதுதான் மனம் இருக்கவே வருகிறது.
அலைப்பற்ற மனம் என்பதே இல்லை.
அலைப்பற்ற மனம் இல்லாது போய்விட்ட மனம்.
--ஓஷோ--
Osho_Tamil

Comments
Post a Comment