புத்தர் கூறுகிறார் ! - OSHO
புத்தர்
கூறுகிறார் !
மனம் தான் எல்லா மாயைகளையும்
உருவாக்குகிறது !
மனம் ஒரு மந்திரவாதி
என்கிறார் !
மனம் தான் நோயை
உருவாக்குகிறது !
அதுவே அதற்கு நிவாரணமும்
தேடுகிறது !
அழகு அருவருப்பு !
வெற்றி தோல்வி !
வளமை வறுமை !
இன்பம் துன்பம் !
இப்படி ஒவ்வொன்றையும் மனம்
உருவாக்கிக் கொண்டே இருக்கிறது !
அந்த எண்ணம் உங்கள் மனதில்
தங்கியவுடன் உங்கள் முழு சக்தியும்
அதை உருவாக்குவதற்கு
செயல் படுகிறது !
எல்லாமே முதலில் ஒரு
எண்ணம் தான் !
நீங்கள் அந்த எண்ணத்தால்
மனோ வசியம் ஆகி விடுகிறீர்கள் !
புத்தர் இந்த மனோ வசியத்தை உடைக்க
வேண்டும் என்கிறார் !
மனிதனை மனோவசிய மீட்பு
செய்ய வேண்டும் !
எல்லாமே மனம் செய்கிற வேலை என்கிற
விழிப்புணர்வு வர வேண்டும் !
இந்த விழிப்புணர்வு உங்களிடம்
வந்து விட்டால் !
அந்த மனம் என்கிற மந்திரவாதி
மறைகிறான் !
ஓஷோ
மருத்துவத்திலிருந்து
மனமற்ற நிலை வரை
Osho_Tamil

Comments
Post a Comment