தன்னையறிதல்
தன்னையறிதல்
காற்றை விட வேகமானது,
உணர்ச்சிகளின் ஊற்றுக் கண்,
ஆக்கம், அழிவு என்பவற்றை தீர்மானிப்பது என ஏகப்பட்ட பெருமைகளை தன்னகத்தே கொண்டது மனித மனம்.
“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா” எனகிற சித்தர் மொழியும் மனத்தின் செம்மையை விளக்கும்
மனமானது ”உணர்வு சார் நிலை”,”அறிவுசார் நிலை” என இரண்டு முகங்களை கொண்டது.
சித்தர்களைப் பொறுத்தவரையில் இதனை மூன்று நிலைகளாய் கூறியிருக்கின்றனர்.
நாம் அவற்றை
“புத்தி நிலை”,
”சித்தி நிலை”,
”முக்தி நிலை” என்பதாக புரிந்து கொண்டிருக்கிறோம்
தன்னைத் தவிர, சுற்றியுள்ள அனைத்திலும் தன்னை இருத்தி அதுதான் தான் என நிலைக்கும் மனநிலைதான் புத்தி நிலை.
தான் சொல்வது மட்டும் சரி என தனக்கென வாழ்வதாக நினைத்துக் கொண்டு புற கூறுகளில் மட்டுமே வாழும் ஒரு நிலை இது.
இந்த மன நிலையில் அகங்காரம்(Eg0) கோபம் மட்டுமே செழித்தோங்கி இருக்கும்.
சிலர் இத்தகைய மனநிலையில் தன் வாழ்கிறார்கள்
தான் யாரெனெ வெளியில் தேடாமல், தனக்குள்ளே தேடிடும் மன நிலைதான் சித்தி நிலை.
இந்த நிலையில் அகங்காரம் அழிந்திருக்கும்.
விருப்பு, வெறுப்புகளை நீக்கி எதிலும் விலகியிருந்து பார்க்கும் பக்குவமான ஒரு மன நிலை இது.
முந்தைய இரு நிலைகளின் முதிர்ந்த மூன்றாவது நிலை இது.
தன்னை தான் உணர்ந்த பேரானந்தமான மன நிலையை முக்தி நிலை எனலாம்.
அன்பும், கருணையும் மட்டுமே ஊற்றெடுத்திடும் உயரிய நிலை இது.
இதுவே தன்னையறிந்த நிலை..

Comments
Post a Comment