தானாக நிகழ்கிற ஞானம் - OSHO
தானாக நிகழ்கிற ஞானம்
பௌத்த நோக்கில் ஒருவர் தானாக ஞானம் பெற்றிருந்தால் - அதுவும் உறுதியில்லை,
ஏனென்றால் சில சமயம் ஞானம் பெற்றுவிட்டதாகத் தவறாகக்கூடக் கருதலாம் -
அதற்கு ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டிருக்க வேண்டும்.
ஞானம் பெறுவதற்கு முன் பல காரணிகள் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.
ஆக தக்க முன்னேற்பாடுகளுக்குப் பின்னரே, திடீரென்று ஞானம் பிறக்கும்.
தானாக ஞானம் பெற்றதாகத் தெரிவது எப்போதும் தானாக நடைபெறுவதில்லை.
ஏற்கனவே தேவையான காரணிகள் உற்பத்தியாக்கப் பட்டிருக்க வேண்டும். எதுவும் காரணம் இன்றி நடைபெறுவதில்லை.
ஆக மாற்றம் உண்டாகும் செயற்றொடர் படிப்படியாக நடைபெறுகிறது.
காரணிகள் ஒவ்வொன்றாகச் சேர்க்கப் படுகின்றன. பின் திடீரென்ற ஒரு கணத்தில் ஞானம் பிறக்கிறது.
திடீரென்று உணர்ந்து கொண்டீர்கள். உணர்வது படிப்படியாக நடைபெறுவதில்லை.
எப்போதும் திடீரென்றே அறிந்து கொள்கிறோம்.
ஆனால் ஆரம்ப நடவடிக்கைகளெல்லாம் படிப்படியாகவே நிகழ்கின்றன.
புத்தர் இதற்கு ஒரு உவமானம் தருகிறார்.
ஒரு மொத்தமான மணிலாக் கயிறு அல்லது சணலினால் செய்யப்பட்ட கயிற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கயிறு கரையோரம் நிறுத்தப் பட்டிருக்கும் ஒரு படகில் இருக்கிறது.
இது போன்ற கயிற்றைக் கவனித்தீர்களென்றால் அது படகில் பயன் படுத்தப் பட்டுக் கால நிலையால் சேதமுற்றிருந்தாலும், அதன் சுற்றளவில் மாற்றம் எதுவும் இருக்காது.
புறத் தோற்றத்தில் எப்போதும் போலவே இருக்கும். அதே வலிமையுள்ளதாகவே தோன்றும்.
ஆனால் நீர்த் துளிகளினாலும், காற்று, மழையால் நனைந்து, சூரிய வெப்பத்தினால் காய்ந்து மீண்டும் ஈரமாவதாலும் அதன் நார்கள் பலவீனமாகிக் கொண்டே வருகின்றன.
மெதுவாக மேலும் மேலும் பலவீனமாகி வருகின்றன.
தேய்மானம் நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் எந்த அளவு பலவீனமானது என்பதைச் சொல்ல முடியாது.
பலவீனமாக்கும் செயற்பாடு படிப்படியாக நடைபெறுவதால் மாற்றத்தைக் கவனிக்க முடிவதில்லை.
ஆனால் ஒரு நாள் அந்தக் கயிற்றை எடுக்கும் போது அது முன் போலவே சுற்றளவு கொண்டதாக இருந்தும் அதை ஒரு நொடியில் எளிதாக அறுந்து விடலாம்.
இப்படித்தான் ஞானம் பெரும் செயற்பாடும் நிகழ்கிறது என்று புத்தர் விளக்கினார்
. ஞானம் பெருவதற்கு முன் செய்யவேண்டிய வேலைகளெல்லாம் படிப்படியாக நடைபெறும்.
ஆனால் ஞானம் பெறுவது திடீரென்று கணத்தில் நடைபெறும்.
ஓஷோ
Osho_Tamil

Comments
Post a Comment