Google

நீங்கள் உங்கள் உணா்வு நிலை முழுவதையும் மனதிலிருந்து மனதில்லாத நிலைக்கு மாற்ற வேண்டும் - OSHO



நீங்கள் உங்கள் உணா்வு நிலை முழுவதையும் மனதிலிருந்து மனதில்லாத நிலைக்கு மாற்ற வேண்டும்.
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺
எப்படி?
இதை உங்களால் செய்ய முடிந்தால்
பிறகு எல்லாம் சாத்தியமே

மனதின் மேல் அக்கறையில்லாமல் இருங்கள்
மனதில் கலந்து கொள்ளாமல் இருங்கள்
மனம் வரட்டும்,செல்லட்டும்.
ஏனெனில், நீங்கள் அக்கறை இல்லாமல் இருந்தால் எதையும் உள்ளே பத்திரப்படுத்தி வைக்க முடியாது.

நீங்கள் அதன் மீது கவனம் செலுத்துவதால் தான் அது முக்கியமாக படுகிறது

ஆகவே முழுமையாக அக்கறையின்றி இருத்தல்.

நட்பாகவும், எதிா்ப்பாகவும் இல்லாமல்
நடுவில் இருத்தல்.
இந்த எண்ணங்களெல்லாம் உங்களைச் சாா்ந்தவையல்ல என்பதைப் போல்
இவையெல்லாம் இந்தப்பொிய உலகத்தின் பகுதி என்பதைப் போல் அவற்றை அங்கேயே
இருக்கவிடுங்கள்.

அக்கறையில்லாமல் சுமந்து செல்லுங்கள்.
ஆனால் அதற்கு அடிமையாகாமல் இருங்கள்.

பிறகு ஒரு நாள்
திடிரென அக்கறையின்மை முழுமையாயிருக்கும் போது உணர்வு நிலை
வெளிப்புறத்திலிருந்து மையத்திற்கு மாறும்.
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺
                            ~ஓஷோ~~~

Comments